தபால் மூல வாக்குபதிவிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்குபதிவிற்கு இன்று (19) முதல் விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் 10 நாட்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் எனவும் வேட்பாளர் மனுத் தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் நேற்றைய தினம் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறும் தினம் தொடர்பில் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.