அடிப்படைவாத கருத்துக்களை வெளியிடுவது அரசியலமைப்பின்படி குற்றமாகும்

அடிப்படைவாத கருத்துக்களை வெளியிடுவது அரசியலமைப்பின்படி குற்றமாகும் என்பதனால் சட்ட வள்ளுனர்கள் அவ்வாறான கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு தண்டனை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்டான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் தனது ஆட்சியை பாதுகாத்துக் கொள்ள இனவாதத்தை தூண்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த தாக்குதலின் போது தனது பக்கம் சாதகமாக முஸ்லிம் அமைச்சர்களுடன் ஒன்றிணைந்து பிரச்சினையை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.