ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் புதிய மேயர்!

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் புதிய மேயராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.எம்.வி.பிரேமலால் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (15) விசேட பொதுச் சபை கூட்டப்பட்டு புதிய மேயர் தேர்வு இடம்பெற்றது.

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் முன்னாள் மேயர் மதுர விதானகே சமீபத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து வெற்றிடமான குறித்த பதவிக்கு இவ்வாறு புதிய மேயர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.