ஜனாதிபதிக்கு பெரும்பான்மை அரசாங்கத்தை வழங்குவது மக்களின் கடமை

69 லட்சம் பேர் அனுமதித்த கொள்கை பிரகடனத்தை ஜனாதிபதியின் அரசாங்கத்தினால் மட்டுமே செயற்படுத்த முடியும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக பெரும்பான்மை பலத்துடன் கூடிய அரசாங்கத்தை ஜனாதிபதிக்கு பெற்றுக்கொடுப்பது பொதுமக்களின் கடமை என அவர் தெரிவித்தார் .

கலவானை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பிரதமர் இதனை தெரிவித்தார் .

இதேவேளை எம்பிலிபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர் வரலாற்றின் மாபெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை நாசம் செய்த பொறுப்பை சஜித் பிரேமதாச ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.