மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைக்க ஒருங்கிணைப்பு குழு – பிரதமர் ஆலோசனை

மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு ஒருங்கிணைப்பு குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் வகையில் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நேற்று (30) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்திய பிரதமர், அரசியல் அழுத்தம் காரணமாக மதுவரித் திணைக்கள அதிகாரிகளை இடமாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்தி, தகுதியான அதிகாரிகளுக்கு மட்டும் இடமாற்றம் வழங்குமாறு அறிவுறுத்தினார்.

அதன்படி, நலன்களை அனுபவிக்கும் இடங்களில் பணிபுரியும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளை இடமாற்ற நடைமுறைக்கு ஏற்ப குறிப்பிட்ட காலத்தில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் கூறினார்.