பொதுமக்களுக்கு நன்மைகள் கிடைக்க ஆரம்பித்துள்ளது – பிரதமர்

கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தின் படி வரி குறைப்பு மற்றும் சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டமை ஊடாக பொதுமக்களுக்கு அதன் நன்மைகள் தற்போதைய நிலையில் கிடைக்கப் பெற்று வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது பிரதமர் இதனை தெரிவித்தார்.