தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் அறுவுறுத்தலை பெற நடவடிக்கை

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் அறுவுறுத்தலை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலப்பகுதியில் பதிவான சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள சந்தேகநபர்களின் தகவல்களை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த விசேசூரிய தெரிவித்தார்.