புதிய வெளிச்சம் 2018

கடந்த வருடம் “புதிய வெளிச்சம் ” செப்டம்பர் மாதம் இலங்கையின் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, முல்வைத்தீவு கிளிநொச்சி, மன்னார் மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களில் 20 நாட்கள் 18 பெரு நிகழ்வுகளாக நடைபெற்று முடிவடைந்தது .

போரின் பேரழிவிற்குப் பின்னர் எங்களில் பலர் மனதிலும் எழுந்த அடுத்தது என்ன என்ற கேள்வியின் பதிலாகத்தான் “புதிய வெளிச்சம்” உருவானது.
புதிய வெளிச்சத்தினால் ஒழுங்கு செய்யப்பட ஆற்றுப்படுத்துகைக் கருத்தரங்கில் அண்ணளவாக பத்தாயிரம் மாணவர்களையும் ,போரால் பாதிக்கப்பட்ட மக்களையும் சென்றடைய முடிந்தது. இதன் மூலம் அவர்களுக்கு ஒரு பொதுவான உளவியல் ஆற்றுப்படுத்துகை உரைகளையே வழங்கியிருந்தோம்.
இதற்கு  உளவியல் ஆற்றுப்படுத்துகை மற்றும் நெறிப்படுத்துகையினை செவ்வனே செய்யக்கூடியவரான பேராசிரியர் ஜெயந்த ஸ்ரீ பாகிருஸ்ணன் அவர்கள் தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் கடந்த வருடம் புதிய வெளிச்ச அமைப்புக்கு வழங்கியதுடன் , இதற்க்கான வழிகாட்டியாகவும் அமைத்திருந்தார்

ஆனால் உண்மையில் அங்கே உள்ள பாதிப்புகளும் தேவைகளும் வகைப்படுத்தப்பட்டு மிகவும் நுணுக்கமாகவும் தொடர்ச்சியாகவும் பணியாற்றவேண்டியதன் அவசியத்தை நேரில் கண்டோம்.குறிப்பாக உள்ளக வன்முறைகள், போதைப் பொருள் பாவனை, முறையற்ற பாலியல் தொடர்புகள், சிறுவர் துஸ்பிரயோகம், மதமாற்றம், ஆசிரியர் தராதர வீழ்ச்சி, தற்கொலை, கல்வியில் ஆர்வமின்மை, வெளிநாட்டு மோகம், நிவாரணங்களுக்காக அலைதல், ஒழுங்குபடுத்தப்படாத உதவிகள், திட்டமிடப்படாத உதவி முறைகள் ,மந்தமான புதிய தொழில் முற்சிகள் போன்ற பல பிரச்சனைகளை இனம் காண நேர்ந்தது.

இப்பயணம் மூலம் பெற்ற அனுபவமும் அறிவும் மிகவும் முக்கியமானவை. வேறுமனே கண்மூடித்தனமாக இருக்காமல் பிரச்சனைகளை சரியாக இனம் கண்டு தேவைகளையும் உதவிகளையும் முறையக திட்டமிடாமல் போனால் மீண்டும் ஒரு பேராபத்து எம்மை வந்தடையும் என்பதை உணர்கிறோம்.
இதன் தொடர்ச்சியாக மேற்கொண்ட பல கந்துரையாடல்களின் மூலம் ,மூன்று முடிவுகளை எடுத்தோம்

1)சமூக , கல்வி ,பொருளாதாரத்தில் உள்ள உளவியல் பிரச்சனைகளை இனங்கண்டு வகைப்படுத்தல்.2) இவற்றை நிறைவு செய்யும் வழிகளை கண்டடைந்தல்.

3) இவற்றை முறையாகவும் தொடர்ச்சியாகவும் செய்து முடித்தல்.

அதிலிருந்து இந்த வருடம் , கல்வி , இயற்கை விவசாயம் ஆகிய இரு பெரும் விழிப்புனர்ச்சி , வழிகாட்டி , செயல் முறை கருத்தரங்குகளை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளோம்
கல்வி
ஆசிரியர்களின்  செயற்பாட்டு திறனை கூட்டுமுகமாக, ஆசிரியர்கள் , அதிபர்களுக்கான பயிற்சி பட்டறைகளும் ,
பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகளும் soft Skills (Personal Development & entrepreneurship development )
 
இயற்கை (உயிர் விவசாயம் )
தமிழகம் , கனடா , ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து விவசாயிகள் , மற்றும் துறை சார்ந்த வல்லுனர்கள் அழைத்துச் சென்று 10 மேற்பட்ட விவசாய கிராமங்களில் “இயற்கை விவசாய பயிட்சி பட்டறைகளை நடத்தவுள்ளோம் .இதன் மூலம் இயற்கை விவசாயம் தொடர்பாக மிக பெரிய விழ்ப்புணர்ச்சியை கொண்டுவரலாம் ,
இவற்றின் மூலம் இளைனர்களின் வேலையில்லா பிரச்சனைகள் முதல் கொண்டு தனிமனித பொருளாதாரம் , வேலைக்கு செல்லும் ஆர்வம் , ஏற்றுமது விவசாயம் , வீட்டுக்கு வீடு விவசாயம் ,    புதிய உற்பத்தி , புதிய சேவை தொழில் துறைகளை கண்டுபிடித்தல் , அவற்றை ஊக்குவித்தல் , புலம்பெயர் மக்களின் உதவி கொண்டு துறைசார் தொழிநுட்பங்களை வளங்களை பகிர்ந்து கொள்ளள்  போன்றவற்றினுடாக வளர்ச்சியடை முடியும் என்ற பெரு நம்பிக்கையுடன் ஜனவரி 01 முதல் ஜனவரி 15 வரை உள்ள நாட்க்களில் புதிய வெளிச்சம் பயணிக்கின்றது
ஜனவரி 02 இலிருந்து 14 ம் திகதி வரை

கல்வி

1. ஆசிரியர்களுக்கான கற்பித்தல் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.
 
A. யாழ்ப்பாண மாவட்டம் – 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.
B. கிளிநொச்சி மாவட்டம் – 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.
C. முல்லைத்தீவு மாவட்டம் – 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.
 
2) அதிபர்களுக்கான நிகழ்வு
 1) யாழ் வடமராட்சி வலயம் 2 ம் திகதி
2) கிளிநொச்சி மாவடட அதிபர்களுக்கானது  4 ம்  திகதி
 
 
2. பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த இளைஞர் யுவதிகளுக்கான வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.
A. யாழ்ப்பாண மாவட்டம் – 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள். B. கிளிநொச்சி மாவட்டம் – 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள். C. முல்லைத்தீவு மாவட்டம் – 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள்.
 
விவசாயம்
 
3. விவசாயிகளுக்கான இயற்கைவிவசாய வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.
 
A. யாழ்ப்பாண மாவட்டம் – 4ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
B . மட்ட்க்களப்பு & அம்பாறை – 6, 7 ஆம் திகதி ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
C. முல்லைத்தீவு மாவட்டம் – 8ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
D. கிளிநொச்சி மாவட்டம் – 9ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
E. மன்னார் மாவட்டம் – 10 ஆம் திகதி  ஒரு நாள் பயிற்சிப்பட்டறை (
Thadsanamaruthamadu Maha Vidiyalayam)
F.  முல்லைத்தீவு  மாவட்டம் -11 ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.(Mallavi sivan Temple)
G .  வவுனியா மாவட்டம் – 11ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
4 யாழ்ப்பாணம்  – 13ஆம் திகதி – அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டும் – முழுநாள்
 
5) யாழ்ப்பணம் பொதுமக்கள் வீரசிங்கம் மண்டபம்
 

6) முடிவு விழா – பொங்கல் விழா – கிளிநொச்சி

நவஜீவன் அனந்தராஜ்

புதிய வெளிச்சம்