புத்துணர்ச்சியையும் , ஆற்றுப்படுத்துகையும் , நம்பிக்கையும் தைரியமும் நன்மையும் , மன வளர்ச்சியையும் தரக்கூடிய இந்த செயல்திட்டத்திற்கு ‘ புதிய வெளிச்சம்’ என்று பெயர்வைத்தோம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். புதிய வெளிச்சம் தன்னுடைய முதலாவது செயல்திட்டத்தை முடித்துக்கொண்டதன் பின்னர் பலரும் என்னிடம் தனித்தனியாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் முகமாகவும் புதிய வெளிச்சம் தொடர்பான ஒரு தெளிவை ஏற்படுத்தும் முகமாகவும் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

2009 பேரழிவிற்குப் பின்னர் எமது சமூகம் அடைந்திருக்கும் துயர நிலை ஒருவகை மன அழுத்தத்தைத் தந்துகொண்டிருந்தது. இருந்தாலும் இதை ஒரு சவாலாக நாம் ஒவ்வொருவரும் எடுத்து விரைவில் இந்த நிலையை மாற்றி முன்னகரவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். இது விடயமாக நான் 2010, 2011, 2012 , 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இலங்கை சென்று வந்திருந்தேன் . பாடசாலை கற்றல் அபிவிருத்தி , சிறு கைத்தொழில்களை ஊக்குவித்தல் , உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச மயப்படுத்தல் போன்ற கருத்தரங்குகளை மேற்கொண்டேன்

முதலில் அதன் அடிப்படையில் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களை குறிப்பாக விதவைகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கக்கூடியவாறான கலந்துரையாடல்களையும் செயல்திட்டங்களையும் மேற்கொண்டு உதவலாம் என தீர்மானித்திருந்தேன்.

இதன் முதல் கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த உளவியல் ஆற்றுப்படுத்துகை மற்றும் நெறிப்படுத்துகையினை செவ்வனே செய்யக்கூடியவரான பேராசிரியர் Dr ஜெயந்தசிறீ பாலகிருஸ்ணன் அவர்களும் ,பேராசிரியர் Dr பாலகிருஸ்ணன் அவர்களும் தங்களுடைய நேரத்தையும் உழைப்பையும் இலவசமாக தரமுன்வந்தார்கள் .

இவர் பேராசிரியர் , முனைவர் கடந்த 35 வருடங்களாக இளநிலை , முதுநிலை மற்றும் ஆராட்சி பேராசிரியராக கோயம்புத்தூர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகின்றார் .தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழித்துறையில் Doctor பட்டங்களை பெற்றவர் .இந்தியாவில் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தை வரையும் குழுவிலும் , சிறந்த பேச்சாளராகவும் , மொழிபெயர்ப்பாளராகவும் , எழுத்தாளராகவும் மட்டுமல்லாது பெண்கள் மன நல , சமூக நல திட்டங்களில் பங்கு கொண்டு முன்னெடுத்துள்ளார் . இவரை கடந்த வருடம் இகுருவி நிகழ்வுக்கு டொரோண்டோ அழைத்ததன் மூலம் ஈழத்துக்கு வருமாறு அன்புடன் கேட்டுக்கொண்டேன் .

அடுத்து அப்பயணத்தை ஒழுங்குபடுத்த மனிதவளமும் பொருள்வளமும் தேவைப்பட்டது. என்னுடைய ஒன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் பத்திரிகைப்பணி நடுவிலும் நானே செல்லவேண்டி ஏற்பட்டது. இது ஒரு இலாபநோக்கமற்ற விடயம் என்பதால் என் விளம்பரதாரர்களிடம் இருந்து பொருள்வளத்தையும் பெறவிரும்பவில்லை. அத்துடன் என் நண்பர்கள் சிலர் உதவ முன்வந்ததையும் ஏற்றுக்கொள்ள எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஆகையால் இம் முதல் முயற்சிக்கு என் மனித வளத்தையும் பொருள்வளத்தையும் இயன்ற அளவு பயன்படுத்துவது எனத் தீர்மானித்திருந்தேன்.

மற்றவர்களுக்கு புத்துணர்ச்சியையும் , ஆற்றுப்படுத்துகையும் , நம்பிக்கையும் தைரியமும் நன்மையும் , மன வளர்ச்சியையும் தரக்கூடிய இந்த செயல்திட்டத்திற்கு ‘ புதிய வெளிச்சம்’ என்று பெயர்வைத்தோம். மூன்று விதமாக எம்மக்களை பிரித்தோம் போரின் எல்லா வகையான காயங்களையும் சுமந்து துண்பப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களை குறிப்பாக பெண் தலைமைத்துவங்களை கொண்ட மக்களை , போராளிகளான “நிகழ்கால ” மக்களையும் , போரினால் தொடர்ந்து துன்பத்தை அனுபவித்து கடந்து சென்ற ‘ கடந்தகால” மக்களையும் , போரினால் பாதிக்கப்படட என் தேசத்தில் பிறந்த எதிர்கால முத்து மணிகள் போன்ற எமது “எதிர் கால ” குழந்தைகளையும் அவர்களது ஆசிரியர்களையும் சந்திப்பதற்காக அக இருள் விலகணும் அகவெளி திறக்கணும் புதிய வழி பிறக்கணும் தமிழ் இனம் சிறக்கணும் என்ற தாரக மந்திரத்தோடு தாயகத்திற்குச் சென்றோம்.

கடந்த செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் அக்டோபர் தொடக்கம் 6 ஆம் திகதி வரையான சுமார் இரண்டுவார காலப்பகுதியில் யாழ்ப்பாணம், திருகோணமலை மட்டக்களப்பு முல்வைத்தீவு கிளிநொச்சி மன்னார் மலையகம் ஆகிய பிரதேசங்களில் உள்ள பல்வேறு பாடசாலைகளிலும் பொது மண்டபங்களிலும் நடைபெற்ற உளவியல் ஆற்றுப்படுத்துகைக் கருத்தரங்கில் அண்ணளவாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டு பயன்பெற்றார்கள்.

இக்கருத்தரங்கிலும் கலந்துரையாடல்களிலும் பெற்ற அனுபவங்களையும் அங்குள்ள மக்களின் நிலையையும் தெரியப்படுத்தும் முகமாகவும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாகவும் கனடாவில் உள்ள நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கடந்த வாரம் ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்தேன்.

அதில் கலந்துகொண்டு கருத்துக்களையும் எண்ணங்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. செயல்த்திட்டங்களோடு மட்டும் நின்றுவிடாது செயல்ப்பாட்டு இயக்கமாக தொடர்ந்து செயலாற்றவேண்டும் என்ற உங்கள் அனைவரதும் வேண்டுகோளின்படியும் விருப்பின்படியும் புதிய வெளிச்சம் தொடர்ந்தும் எம் சமூகத்திற்கான வெளிச்சம் தேடி விருப்பும் அர்ப்பணிப்பும் கொண்ட உங்கள் ஒவ்வொருவரையும் இணைத்துக்கொண்டு பயணிக்கும்.

மகாத்மா காந்தி , விவேகானந்தர் , அப்துல் கலாம் ஆகியவர்களுக்கு பின்னர் எம் தேசத்துக்கு வந்த Dr ஜெயந்தசிறீ பாலகிருஸ்ணன் அவர்களுக்கு எனது அன்பான நன்றிகளை தெரிவித்து , புதிய வெளிச்சத்தின் அடுத்த செயல்திட்டம் தொடர்பாக தொடர் கலந்துரையாடல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அன்பும் ஆதரவும் நல்கும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அக இருள் விலகணும்! அகவெளி திறக்கணும்! புதிய வழி பிறக்கணும்! தமிழ் இனம் சிறக்கணும்

அன்புடன்
நவஜீவன் அனந்தராஜ் BSc
புதிய வெளிச்சம்
Tel : 416 272 8543

===========================================================================================
”புதிய வெளிச்சம்”
416.272.8543

 

மட்டக்களப்பு, திருகோணமலை , யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு , கிளிநொச்சி , மன்னார் , மலையகம் ஆகிய மாவட்டங்களில் பேராசிரியர் Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்குகொண்ட ” புதிய வெளிச்சம் ” நடைபெற்றது.

புதிய வெளிச்சம் – 20 நாட்கள் 18 பெரும் நிகழ்வுகள் 10,000 ற்கு மேற்ப்படடவர்கள் பங்கேற்ப்பு

1) வல்வை மகளிர் மகா வித்தியாலயம்(Teenager )
2) ஹாட்லிக் கல்லூரி (Teenager )
3) மெதடிஸ் கல்லூரி (Teenager )
4 ) புதுக்குடியிருப்பு – போரரால் பாதிக்கப்படட பெண்கள்
6) முல்லைத்தீவு – போரால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்ட பெண்கள் .
7) கிளிநொச்சி போரால் பாதிக்கப்படடவர்கள்
8) இணுவில் பொது வாசிகசாலை
9 ) நல்லூர் மணிமண்டபம் – International day of Non-violence
10) வீரசிங்கம் மண்டபம்
11) சுய உற்பத்தி பொருளாதார மேம்படுகை கண்காட்சி சந்திப்பு – கிட்டு பூங்கா
12) யாழ் இந்துக் கல்லூரி (Teenager )
13) கோப்பாய் ஆசிரியர் பயிற்சி சாலை
14) மன்னார் போரினால் பாதிக்கப்படட மக்கள்
15) திருகோணமலை இந்துக் கல்லூரி (Teenager )
16) மடடக்களப்பு போரினால் பாதிக்கப்பட்டமக்கள் (தேவநாயகம் மண்டபம் ,அரசடி )
17) மடடக்களப்பு நான்கு பெண்கள் பாடசாலையிலிருந்து (Teenager only )
18) ஹட்டன் ஆசிரிய பயிற்சி கல்லூரி
19) 5ற்கு மேற்பட்ட தனிப்பட்ட நிகழ்வுகள் (Private )

மட்டக்களப்பு, திருகோணமலை , யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு , கிளிநொச்சி , மன்னார் , மலையகம் ஆகிய மாவட்டங்களில் பேராசிரியர் Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்குகொண்ட ” புதிய வெளிச்சம் ” நடைபெற்றது.

நவஜீவன் அனந்தராஜ்

tel 001 416 272 8543

ஊடக அறிக்கை “புதிய வெளிச்சம்”

புதிய வெளிச்சம் கருத்துப் பகிர்வும் , மக்கள் சந்திப்பும்
பேராசிரியர் Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்குகொண்டு இலங்கைத்தீவின் தமிழர் வாழும் பல்வேறு பகுதிகளிலும் 20 நாட்கள் 18 பெரு நிகழ்வுகளாக நடைபெற்ற புதிய வெளிச்சம் நிகழ்வு குறித்த கருத்துப் பகிர்வும் மக்கள் சந்திப்பும் 17 Oct 2016 மாலை 7.00 PM அன்று கனடா ,ஸ்காபோரோவில் அமைந்துள்ள Estate banquet hall இல் நடைபெற்றது . அதில் வழங்கப்படட ஊடக அறிக்கை
“புதிய வெளிச்சம்”

இலங்கையின் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, முல்வைத்தீவு கிளிநொச்சி, மன்னார் மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களில் 20 நாட்கள் 18 பெரு நிகழ்வுகளாக நடைபெற்று முடிவடைந்துள்ளது “புதிய வெளிச்சம்”.

போரின் பேரழிவிற்குப் பின்னர் எங்களில் பலர் மனதிலும் எழுந்த அடுத்தது என்ன என்ற கேள்வியின் பதிலாகத்தான் “புதிய வெளிச்சம்” உருவானது.

அக இருள் விலகணும்!

அகவெளி திறக்கணும்!

புதிய வழி பிறக்கணும்!

தமிழ் இனம் சிறக்கணும்!

என்ற தாரகமந்திரத்தோடு “புதிய வெளிச்சம்” தன் பயணத்தை ஆரம்பித்தது.

இப்பயணத்தில் முக்கிய விடயமான உளவியல் ஆற்றுப்படுத்துகை மற்றும் நெறிப்படுத்துகையினை செவ்வனே செய்யக்கூடியவரான பேராசிரியர் ஜெயந்த ஸ்ரீ பாகிருஸ்ணன் அவர்கள் தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் தர முன்வந்தார்.

ஆற்றுப்படுத்துகைக் கருத்தரங்கில் அண்ணளவாக பத்தாயிரம் மாணவர்களையும் மக்களையும் சென்றடைய முடிந்தது. இதன் மூலம் அவர்களுக்கு ஒரு பொதுவான உளவியல் ஆற்றுப்படுத்துகை உரைகளையே வழங்கியிருந்தோம். ஆனால் உண்மையில் அங்கே உள்ள பாதிப்புகளும் தேவைகளும் வகைப்படுத்தப்பட்டு மிகவும் நுணுக்கமாகவும் தொடர்ச்சியாகவும் பணியாற்றிவேண்டியதன் அவசியத்தை நேரில் கண்டோம்.

குறிப்பாக உள்ளக வன்முறைகள், போதைப் பொருள் பாவனை, முறையற்ற பாலியல் தொடர்புகள், சிறுவர் துஸ்பிரயோகம், மதமாற்றம், ஆசிரியர் தராதர வீழ்ச்சி, தற்கொலை, கல்வியில் ஆர்வமின்மை, வெளிநாட்டு மோகம், நிவாரணங்களுக்காக அலைதல், ஒழுங்குபடுத்தப்படாத உதவிகள், திட்டமிடப்படாத உதவி முறைகள் போன்ற பல பிரச்சனைகளை இனம் காண நேர்ந்தது.

அதே சமயம் சிறப்பான சுயதொழில் முனைவோரையும், ஆரோக்கியமான பெண்தலைமைத் துவங்களையும் தூரநோக்குக் கொண்ட சிந்தனையாளர்களையும் கூடவே கண்டோம். இவர்களில் போராளிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கவிடயம்.

இப்பயணம் மூலம்பெற்ற அனுபவமும் அறிவும் மிகவும் முக்கியமானவை. வேறுமனே கண்மூடித்தனமாக இருக்காமல் பிரச்சனைகளை சரியாக இனம் கண்டு தேவைகளையும் உதவிகளையும் முறையக திட்டமிடாமல் போனால் மீண்டும் ஒரு பேராபத்து எம்மை வந்தடையும் என்பதை உணர்கிறோம். இது தொடர்பாக எம்மி டையே ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வெளிப்படையான செயல்திட்டங்கள் நடைமுறைக்கு வரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே உங்களை இன்று சந்திக்கின்றோம்.

இன்றைய சந்திப்பின்மூலம் ஆரம்பப் புள்ளியாக பின்வரும் மூன்று பரிந்துரைகளை முன்வைக்க விரும்புகிறோம்.

1)சமூக , கல்வி ,பொருளாதாரத்தில் உள்ள உளவியல் பிரச்சனைகளை இனங்கண்டு வகைப்படுத்தல்.

2) இவற்றை நிறைவு செய்யும் வழிகளை கண்டடைந்தல்.

3) இவற்றை முறையாகவும் தொடர்ச்சியாகவும் செய்து முடித்தல்.

இனி என்ன என்ற கேள்வியை பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் முன்னாலேயே விடுகின்றோம்.

நவஜீவன் அனந்தராஜ்

”புதிய வெளிச்சம்”
416.272.8543