சமூக மாற்றத்திற்கான புதிய வெளிச்சம் விருது மருத்துவருக்கு

Making a Difference Award -Puthiya Velicham Award
சமூக மாற்றத்திற்கான புதிய வெளிச்சம் விருது
Dr.Ramanathan Lambotharan

இகுருவியின் புதிய வெளிச்ச விருது மருத்துவ கலாநிதி திரு லம்போதரன் ராமநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது . அவர் பற்றிய சிறு குறிப்பு

அர்பணிப்பான அரவணைப்பு  கிடைக்குமானால் பூமியில் தூவப்படும் விதைகள் எல்லாம் நாளை முளைக்கும்  பின்னொரு நாளில் அவை பெருமரமாகும்’
டொரோண்டோ  பெரும்பாகத்தில் வாழும் மருத்துவ ஆளுமைகளில் முக்கியமானவர் வைத்திய கலாநிதி லம்போதரன். இவரை காண்பதற்கும் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கும் தினமும் பல நூற்றுக் கணக்கானவர்கள் காத்திருக்கின்றார்கள். மருத்துவர்களுக்கே உரிய கனிவோடும் பொறுமையோடும் தன்னை நாடி வருவபவர்களை அரவணைத்துக் கொள்ளும் ஒருவர்;. நெருக்கடி மிக்க, நேரமின்மை என்பதே தாரக மந்திரமாகிப் போன கனேடிய வாழ்கைச் சூழலிலும் தான் வாழும் சமூகத்திற்கான பங்கு மிக அவசியமானது என்பதை தனது செயல்கள் மூலம் பலருக்கும் வைத்திய கலாநிதி லம்போதரன். உணர்த்தி வருகின்றார். சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பின்  ( IMHO) தீவிர செயற்பாட்டாளராக விளங்கும் வைத்திய கலாநிதி லம்போதரன் அந்த அமைப்பின் மூலம் தயாகத்தில்  வாழும் மக்களுக்கு பல்வேறு விதமான மருத்துவ சுகாதார உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருவதில் முன்னிற்கின்றார்.ஒரு வருடத்தில் சில வார காலப் பகுதியை தாயக மக்களுக்கான மருத்துவ சுகாதார உதவிகளை வழங்குவதற்காகவே அங்கு சென்று பணியாற்றி அர்பணித்துள்ளார். கொடிய யுத்தம் காரணமாக ஆதரவற்று நிற்கும் இளம் குழந்தைகளை அரவணைத்து அவர்களுக்கான அனைத்து தேவகைளையும் பூர்த்தி செய்யும் புனிதப் பணியை பல்வேறு சாவால்களின் மத்தியிலும் அயராது தொடர்கின்றவர்.  சமூகப் பொறுப்புணர்வுடன் மற்றவர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் நோக்கில் தன்னலமற்று இயங்கி வரும் வைத்திய கலாநிதி லம்போதரன் அவர்களின் முன்னுதாரணம் மிக்க செயற்பாடுகளுக்கும் அர்பணிப்பிற்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம் ‘புதிய வெளிச்சம்’ எனும் சிறப்பு விருதை வழங்கி  eகுருவி பெருமிதம் கொள்கின்றது.

( இவ்விருதை Nava Law Professional Corporation நிறுவன அதிபரும் , சட்ட வல்லுனரும் திரு Kubes Navaratnam அவர்கள் வழங்குவதை படத்தில் காணலாம் )
This Award Sponsored By:
Nava Law Professional Corporation

 

Making A Difference Award
Dr. LAMBOTHARAN
“Every seed sown would germinate tomorrow and grow up to be a huge tree later if only it receives care and compassion”
Dr. Lambotharan is one of the most remarkable medical personalities of Toronto. Hundreds of people queue up every day to meet him for medical consultation. His approach is filled with patience and empathy. Dr..Lambotharan through his commendable service to his society sensitizes every one that want of time is no excuse for neglecting one’s duty to the community. As a dedicated member of IMHO, Dr.Lambotharan has extended is medical assistance to the people of Sri Lanka . Every year he spends a considerable period in his mother land to provide service to the poor and the needy. His service includes destitute and orphaned children. His tireless, immaculate work is highly noble and praise worthy. With a great social accountability, Dr. Lambotharan designs a better dawn to the people of a war torn country.
EKuruvi derives immense pride in honouring Dr.Lambotharan with the special award PUTHIYA VELICHAM and registers its gratitude.