வடமராட்சி RED Rose Farm ஊடான விவசாய வாரம் (பாகம் 3)

தொடர்ச்சி பாகம் 3.

வடமராட்சி RED Rose Farm ஊடான விவசாய வாரம்

💚💚இயற்கை விவசாய வாரம் 2020 ஜனவரி 8 ஆம் திகதியில் இருந்து 14ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு எங்கும் மூன்றாவது வருடமாக வெற்றிகரமாக நகர்த்தியிருக்கின்றோம். இதில் 2018ஆம் ஆண்டில் புதிய வெளிச்சத்தில் ஆரம்பிக்கப்பட “இயற்கை வழி இயக்கம்” திறம்பட நடத்தியுள்ளார்கள். இந்த வருடம் “பயிர்களைக் காப்போம் உயிர்களைக் காப்போம்” “Protecting Plants Protecting Lives” எனும் தொனிப்பொருளில் ஆரம்பித்திருந்தோம். ஏழு நாட்களும் பாடசாலைகளில், அரச திணைக்களங்களில், இயற்கை விவசாய பண்ணைகளில், பொது இடங்களில் என பல களப்பயிற்சி நெறிகள் பல விழிப்புணர்ச்சி நிகழ்வுகள் மற்றும் சேதன “நெற்செய்கை வயல் விழா” என் வெற்றிகரமாக நடந்துள்ளன.

💚💚இதில் விவசாய போதனாசிரியர் மாவடியூர் சூ.சிவதாஸ் அவர்களின் உதவியுடன் விவசாயிகளுக்கான நூற்றிற்கும் மேற்பட்ட இயற்கை பூச்சி விரட்டிகள், இயற்கை பசளைகள் செய்முறைகளை தாங்கிய விவசாயிகளுக்கான “ஏர்முனை” சஞ்சிகை வெளியிட்டிருந்தோம் , வவுனியா , யாழ் இரு நகரங்களில் நடந்திருந்தது

💚💚இயற்கை விவசாய “அங்காடி” ஊரெழுவில் நிரந்தர சந்தையாக திறந்து வைக்கப்பட்டது .இது நஞ்சற்ற விவசாய பொருட்களை (Organic) பெற்று கொள்ளலாம் . விவசாயிகளே இதன் விலையை நிர்மாணித்து விற்பனைக்காக கொடுப்பார்கள் . இது ஒன்டாரியோ , கியூபா கிராமங்களில் இருப்பது போன்று அமையும் . எனது தந்தையின் கைகளினால் திறந்துவைத்திருந்தார்கள் .

💚💚எனது தந்தை என்பதற்கு அப்பால் , அவரது சகோதரன் ஸ்ரீதரன் (மணி )நடராஜா வடமராட்சியில் மிகப்பெரிய “இயற்கை விவசாயியாக இருந்தவர் , 1986 இல் வடமராட்சியில் புகழ் பூத்த “RED Rose Farm” வெற்றிகரமாக நடத்தியிருந்தார் , அவர் விவசாயம் செய்துக்கொண்டிருக்கும் போது இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் . அவர் இறக்கும் போது இரண்டு மாடி கட்டிடங்களில் சுமார் 4000 கோழிகள் , 15 மாடுகள் ,12 பண்டிகள் மற்றும் சொந்தமாக லொறிவைத்து கொழும்புக்கு ஏற்றுமதி செய்யும் முந்திரிகையும் , மா ,வாழையும் எல்லா மரக்கறிகள் உற்பட வெங்காயமும் வைத்திருந்தார் அது இப்போதும் என் கண்களில் தெரிகின்றது . கோப்பி , தேயிலை என கண்டதையும் முயற்சி செய்து பார்ப்பார்கள் . எனது அப்பாச்சி ஒரு முழுநேர ஆளுமையான விவசாயியாக இருந்தார் , ஒட்டு செய்முறை மூலம் சுமார் 26 வகையான ரோஜா பூக்கள் விற்பனைக்கு இருந்தன .மிக பெரிய வருமான வியாபாரமாக இருந்ததது எல்லாமே ராணுவத்துக்கு இறையாகும்வரை … இன்று 2020 இல் கூட இன்னும் அந்த “RED Rose Farm” பண்ணையை யாராலும் எங்கள் மண்ணில் நிரப்ப முடியவில்லை . எனது சிறுவயது விடுமுறைகளை அங்கேயே கழிந்திருந்தேன் . எனது தந்தையின் கைகளினால் முதலாவது நிரந்தர அங்காடியை திறந்து வைத்தமைக்கு நன்றிகள்

💚💚ஒவ்வொருவருடமும் “இயற்கை விவசாய வாரம் இது ஒரு #இயற்கைவிவசாயம் , #வீட்டுத்தோட்டம் #தற்சார்பு, #பல்லுயிர்பாதுகாப்பு , புலம்பெயர் விவசாய முதலீடு என்ற விபுணர்ச்சி வாரம் என்பதால் விளம்பரத்துக்கான செலவும் அதிகமாகவே இருக்கும் . அடுத்தவருடம் வடக்கு கிழக்கு முழுவதும் முதல் 20 சிறந்த புதிய வீட்டுதோட்ட முயற்சியாளர்களுக்கு சுமார் 15000 ரூபா தலா வீதம் பரிசுத்தொகை வழங்கவுள்ளோம் .வெகுவிரைவில் இயற்கை வழி இயக்கம் அறிவிப்பார்கள்

💚💚 தொடந்தும் வரும் வருடங்களில் தை மரபு திங்களில் எமது நிலம் பாதுகாப்பு, நிலத்தை மீட்டல் தொடர்பாக பல படிப்படியான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம். இந்த வருடம் எனது பங்களிப்பாக $1500 டொலர்களை பங்களிப்பு செய்திருந்தேன். (ஏர்முனை, Marketing campaign and others), மேலும் இயற்கைவழி இயக்கம் , சிறகுகள் அமைப்பு , பாடசாலைகள் பொது அமைப்புக்கள் , தனிமனிதர்களின் உழைப்புகளும் அவர்களுது பெரு நிதி பங்களிப்புகளுக்கும் பேரன்புடன் நன்றிகள் .இதன் பின்னால் உழைத்த நூற்றுக்கும் அதிகமான நண்பர்கள் அனைவருக்கும் சிரம்தாழ்த்தி நன்றிகள்.தொடர்ந்தும் நாம் இதுவிடயமாக எவ்வாறு நடத்தலாம் என்று உங்கள் ஆலோசனைகளை இதில் சம்பத்தப்பட்ட அனைவரும் எதிர்பார்கின்றோம் .

நாளை தொடரும் ..

நவஜீவன் அனந்தராஜ்
416 272 8543