புதிய நம்பிக்கை ராகியினுடாக ” ஆசிரியர் விருது அறிமுகமும்” , 2 மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீடும்

கடந்த நான்கு  வருடங்களாக புதிய வெளிச்சம் மூலம் இளைனர்களை வலுவூட்டல், ஆசிரியர்களை வலுவூட்டல் மற்றும் இயற்கை விவசாய முறையை அறிமுகப்படுத்தல் என்பவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் யாழ்ப்பாணம், வன்னி, திருக்கோணமலை, மட்டக்களப்பு, மலையகம் ஆகிய இடங்களில் 28 நிலையங்களில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களிடையே கலந்துரையாடல்கள், ஊக்குவிப்புச் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தோம்.

மிகச் சிறந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றக்கூடிய ஆசிரியர்கள் காணப்பட்டபோதும்,அவர்களிடையே மனச்சோர்வும், விரக்தியும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையீனங்களும் இருந்தமையை அவதானித்தோம். இத்தகைய ஒரு எதிர்மறையான போக்கு தொடர்ந்தும் காணப்படுமானால் வடக்குகிழக்கு மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களின் கல்வி அபிவிருத்தி மற்றும் ஒழுக்க விழுமியங்களைப் பேணுதல் என்பவற்றில் பாரிய பின்னடைவுகள் மேலும் ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்டோம் .

இவ்வாறான பாரிய பின்னடைவில் இருந்து எமது ஆசிரியர் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டுமானால் அவர்களிடையே மீளவலுவூட்டல் செயலமர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என புதிய வெளிச்சம் குழுவினரால் தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த வருடம் வடமாகாணக் கல்வி அமைச்சரின் அனுமதியுடன், ஆசிரியர்களை வலுவூட்டும் வகையிலான செயலமர்வுகள் கல்வியாளர் குழுவினரின் வழிகாட்டலில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு வலயங்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டன.

அவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்வுகளின் தொடர்ச்சியாக “சர்வதேச ஆசிரியர் தினத்தின் பொழுது நல்லாசிரியர்களைத் தெரிவு செய்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து ஐந்து  நல்லாசிரியர்களைத் தெரிவு செய்து அவர்களுக்குப் பணப்பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.

இதில் முதல்கட்டமாக  இவ் ஆசிரியர் விருதுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 2 மில்லியன் ரூபாக்களை நான் முதல் கட்டமாக அன்பளிப்பாக புதிய வெளிச்சம் ” ஆசிரிய நிதி ” ஊடாக ஒதிக்கீடு செய்கின்றேன் . இந்நிதி வடக்கு கிழக்கு மாணவர்களினால் அடையாளம் காணப்படும் பத்து ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இவ்விருது வழங்கப்டும்.

எனது தந்தையும் ஒரு ஆசிரியர். அவரது விடாமுயற்சியான ஆசிரிய பணியையும் அவரது மாணவர்கள் அறிவார்கள். வடமாகாண கல்வி அமைச்சரின் செயலாளராக இருக்கும் அவர் தன்னுடைய 50 வருட ஆசிரியப்பணியில் இருந்து இந்த வருடம் தனது 70 வயதில் ஓவ்வுபெற உள்ளார். அவரது ஆலோசனையிலும், அவரது விருப்பத்துக்கும் அமைவாக இத்திட்டத்துக்கு அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு 2 மில்லியன் ரூபாக்களை வழங்குவதில் பெருமையடைகின்றேன்.

தொடர்ந்தும் என் நண்பர்கள், உறவினர்கள்  இந்நிதியத்துக்கு உதவி செய்யும் பொருட்டு விருது பெரும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் , ஊக்குவிப்பு  நிதி மாவட்டங்களும்  மேலும் விரிவாக்கப்படும். இவ்வாறான ஆசிரியர் ஊக்குவிப்பு செயற்பாடுகள், புதிய வெளிச்சம் தொடர்ந்தும் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னெடுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

இவ்வருடம் இந்த விருதை பெரும் துவாரகா பிரதீபன், சிவகாரன் சுப்ரமணியம் மற்றும் அன்பளிப்பு பெரும் ஈழத்தின் மீள் எழுவோம் சாட்சியான குழந்தை ராகினிக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம் .

குழந்தை ராகினிக்கு முழுநேர ஆசிரியராக கற்பித்த ஆசிரியை  துவாரகா பிரதீபன் 50,000 ரூபாவையும், பகுதிநேரம்  கற்பித்த ஆசிரியர்களான சிவகரன் சுப்ரமணியம் (ISA) மற்றும்  Mrs.CODVIN RASOTHINY அவர்கள்  50,000  ரூபாவையும், விருதுகளையும் பெற்றுக்கொண்டார்கள் .  சிவகரன் சுப்ரமணியம் ஆசிரியர் தனக்கு கிடைத்த 40,000 ரூபாவையும்  குழந்தை ராகினிக்கு அன்பளிப்பாக வழங்கினார் . இந்நிகழ்வு அனைவரையும் சந்தோஷத்தையும் , புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியது.

கடந்த கிழமை 08 / 09 / 2018 அன்று இந்நிகழ்வை நடத்தி வைத்த கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் புதியவெளிச்சம் குலசிங்கம் வசீகரன் , அப்பா (நடராஜா அனந்தராஜ்) ஆகியவர்களுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.

நவஜீவன் அனந்தராஜ்
புதிய வெளிச்சம்
416 272 8543