பல மாத வறட்சியின் பின்னர் வவுனியாவில் மழை

வவுனியா மாவட்டத்தில் பல மாதங்களாக நிலவிய வறட்சியினை தொடர்ந்து நேற்று (16) மாலை மற்றும் இன்று (17) மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதேசத்தில் பல மாதங்களாக நிலவிய வறட்சி காரணமாக அநேகமான பயிர் செய்கைகள் சேதமடைந்திருந்த நிலையில் , குடிநீரை பெற்றுக் கொள்வதற்கும் பிரதேசவாசிகள் சிரமத்தை எதிர்க்கொண்டிருந்தனர்.

வறட்சியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பெய்த இந்த மழை தமக்கு பாரிய நிவாரணமாக அமைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.