ராஜித்த சேனாரத்விற்கு மீண்டும் அழைப்பாணை

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்வை எதிர்வரும் 05 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

கடற்படை புலனாய்வுப் பிரிவு கொமாண்டர் சுமித் ரணசிங்க ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறைப்பாடு ஒன்றுக்கு அமைவாக இந்த அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தன்னை கைது செய்து விளக்கமறியலில் வைத்தமை அரசியல் அழுத்தங்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாக கொமாண்டர் சுமித் ரணசிங்க தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், ராஜித்த சேனாரத்னவிற்கு நேற்று (29) ஆணைக்குழுவில் ஆஜராகாத காரணத்தால் அவருக்கு மீண்டும் அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.