வீட்டு பொருளாதாரத்தை பாதுகாக்க ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்கவும்

வீட்டு பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக வாக்களிக்க வேண்டிய ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி என அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மொரட்டுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நான் கூறினேன் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் டெனிம் தருவோம் என்று. தற்போது டெனிம் நாட்டில் தயாரிக்கப்படுகின்றது. தற்போது நாடு அடகு வைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்று கூட வாங்க முடியாத நிலை ஏற்படும். இலங்கையில் கைப்பேசி தயாரிக்க முடியுமா? ஹலோ சார் என்று தான் கூற வேண்டி வரும்.

தலைக்கவசத்திற்கு பதிலாக தகர டின்னைதான் தலையில் மாட்டிக் கொள்ள வேண்டும். நாம் அந்த இடத்துக்கு செல்வது நல்லதல்ல. இந்த நாட்டை காப்பாற்றக்கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமே. எமது தரப்பினர் காலை இழுத்து விட்டாலும் நாங்கள் ஓடுவோம். வீட்டு பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார்.