நான் நிதி அமைச்சராக இருந்த போது தான் பிரச்சார செலவு நிதியை குறைத்தேன்

ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டில் பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்த ஐக்கிய தேசியக் கட்சி எதிர்காலத்திலும் விரைவான அபிவிருத்தியை செயற்படுத்துவதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று நிசப்தமான அபிவிருத்தி பணிகள் நடைபெறுகின்றன. அது தொடர்பில் நாம் கூச்சலிடுவதில்லை. முன்னைய ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை வேறு அதற்கு கிடைத்த பலனும் வேறு.

ஆனால் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை பாதுகாத்து நாட்டின் சுயநிர்ணயம், ஐக்கியம் ஆகியவற்றை பாதுகாத்து நாட்டு மக்களின் இதயத்திற்கு ஏற்ற அபிவிருத்தியை முன்னெடுப்பதே எமது நோக்கம்.

அதனை நாம் செயற்படுத்தி வருகின்றோம். நான் நிதி அமைச்சராக இருந்த போது தான் பிரச்சாரங்களுக்காக செலவிடப்படும் நிதியை குறைத்தேன்.

எம்மால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை மக்களுக்கு அடையாளப்படுத்த கிடைக்காமை துரதிஷ்டவசமானதே ஆனால் நாம் உண்மையான அபிவிருத்தியை முன்னெடுக்கின்றோம். அந்த அபிவிருத்தி பணிகள் மக்களின் இதயங்களுக்கு உணரக்கூடியவை´ எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.