ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு?

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் தமது வேட்பாளரை அறிமுகப்படுத்தியதன் பின்னர் கட்சி என்ற வகையில் தமது ஆதரவு எந்த குழுவினருக்கு என்று தீர்மானிக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனை அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிறுத்தப்படும் வேட்பாளர்களின் கொள்கை மற்றும் தூரநோக்கு தொடர்பில் உரிய தௌிவுப்படுத்தலை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.