ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கௌரவத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதாக கட்சியின் முன்னாள் பொது செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளுக்கும் இடையில் இடம்பெறவுள்ள 6 ஆம் கட்ட கலந்துரையாடலின் போது கலந்துரையாடப்பட உள்ள விடயங்கள் தொடர்பான இரு அறிக்கைகள் கைமாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரு கட்சிகளும் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.