வல்வெட்டித்துறை பொலிஸார் வாக்களிக்க முடியாமை தொடர்பில் விசாரணைகள்

வல்வெட்டித்துறை பொலிஸார் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்காக முன்வைத்த விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வல்வெட்டித்துறை பொலிஸார் சார்பில் 54 விண்ணப்பங்கள் தபால்மூல வாக்களிப்பிற்காக முன்வைக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றில் 43 விண்ணப்பங்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 25 விண்ணப்பங்கள் பொலிஸாரின் நிர்வாக ரீதியான இயலாமையின் காரணமாக நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் தலைமையக விசேட விசாரணை பிரிவின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் தபால்மூல வாக்களிப்பு நிராகரிக்கப்பட்ட வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்களிப்பதற்கு ஏற்றவகையில் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.