ரணில் ஜனாதிபதியானால், சஜித் பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை வெற்றியடையும் என நம்புவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மல்வான பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச எச்சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியை விட்டுச் செல்வதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றி, பிரதமர், சபாநாயகர் மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைந்தால் மாத்திரமே என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றால், அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்படவேண்டும் என இராஜாங்க அமைச்சர் ருபான் விஜேவர்தன தெரிவித்தார்.