ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததும் இந்நாட்டு பொருளாதாரம் மாற்றியமைக்கப்படும்

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததும் இந் நாட்டு பொருளாதாரம் மாற்றி அமைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் மக்கள் சந்திப்பு ஒன்று மருதானை சுதுவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, தமது வெற்றியின் பின்னர் பொதுமக்களுக்கு பொருளாதார பெக்கேஜ் ஒன்று பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதன்படி மக்களுக்கு முதலீடு, நுகர்வு மற்றும் சேமிக்க முடியும் எனவும் அதன் ஊடாக நாட்டின் பொருளாதார அதிகரிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.