அருட்திரு.ஆறு திருமுருகன் அவர்களின் உரை

தேச அடையாளம் அரும்பொருள் காட்சியகம் மாபெரும் திறப்பு விழா..

💚அருட்திரு.ஆறு திருமுருகன் அவர்களின் நெறிப்படுத்தலில் மற்றுமொரு பெரும் முயற்சி “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டு (25/01/2020) திறக்கப்பட்டது

💚சுமார்12 பரப்புகாணியில் 3 மாடிக்கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது இந்தஅரும்பொருள் காட்சியகம். அதன் நுழைவாயிலில் சங்கிலிய மன்னன்,எல்லாளமன்னன் இருவரின் உருவச்சிலைகள் அலங்கரிக்கின்றன. உள்ளே யாழ்ப்பாணப் பேரரசைஆட்சிசெய்த 21 மன்னர்களின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. 💚💚ஆறுதிருமுருகன் ஐயாஅவர்களை 2000 ஆம்ஆண்டளவில் ஓர்அதிபராக அவரை முதல் முதல் சந்திக்க நேர்ந்தது . இதிகாசங்களில் படித்திருக்கின்றேன் , அழிந்ததேசத்தின் மனிதர்களின் துன்பத்தை சுமப்பதற்க்காக இறைவன்மனிதஉருவத்தில் வந்துவாழ்வதாக அறிந்திருக்கின்றேன் . அந்தமனிதக்கடவுளோடு நானும்வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் 💚💚எமது அழைப்பின் பேரில் கடந்த மே மாதம் கனடா வந்து இகுருவி விருதை பெற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் , சுமார் 15 க்கு மேற்பட்ட ஆற்றுப்படுத்துகை நிகழ்வுகளை கனடாவில் நடத்திவிட்டு சென்றுள்ளார் .நாங்களும் இகுருவி உண்டியல் மூலம் விற்பனையில் கிடைத்த 1350 டொலர்கள் உற்பட 20,000 டொலர்களை எங்களினுடாக மக்கள் அவரது சமூக பணிகளுக்கு அன்பளிப்பு செய்துள்ளார்கள் . மேலும் 2018 இல் வடக்கில் நடந்த புதியவெளிச்ச நிகழ்வுகளில் பங்குபற்றியுள்ளார் .

💚💚தனதுவாழ்நாள் முழுவதையும் எம்தேசமக்களுக்காக வாழும் கடவுள்அவர். புலம்பெயர் மக்கள்நாங்கள் தாயகம்செல்லும் போது” சிவபூமி அறக்கட்டளைக்கு ” சென்று அவரிடம் ஆசிபெற்று, உங்கள்குழந்தைகளுக்கும் அந்த ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள் . மேலும் அவரதுநிர்வாகத்தில் இயங்கும் 20 சமூகஅறக்கட்டளை நிர்வகிக்க உங்கள்பங்களிப்புகளை வழங்குவதன் மூலம் உங்கள் சமூக கடமையையும் நிறைவெற்றிகொள்ளலாம்

💚💚அவரது சிவபூமி அறக்கட்டளை நிலையங்கள்..
🇦 மனவிருத்திப் பாடசாலை – கோண்டாவில்
🇧 தொழிற்பயிற்சி நிலையம் – கோண்டாவில்
🇨 முதியோர் இல்லம்–தொல்புரம் சுழிபுரம்
🇩 மடம்– கீரிமலை
🇪 திருவாசக அரண்மனை – நாவற்குழி
🇫 மனவிருத்திப் பாடசாலை – கிளிநொச்சி
🇬 கலைக்களஞ்சியம் – கீரிமலை
🇭 யாத்திரிகர் விடுதி- கீரிமலை
🇮கோட்டம் – கொற்றாண்டார் குளம்இயக்கச்சி
🇯 ஞானாச்சிரமம் – குப்பிளான்
🇰 கல்விநிதியம் – கோண்டாவில்
🇱 பாடசாலை – திருகோணமலை
🇲 மடம்– திருகோணமலை
🇳 வாழ்வாதார நிதியம் கோண்டாவில்
🇴 மருத்துவ நிதியம் கோண்டாவில்
🇵 அபயம்இலவசமருத்துவமனை – ஆனைக்கோட்டை
🇶நாய்களின் சரணாலயம் இயக்கச்சி
🇷 பஞ்சாமிர்த பழத்தோட்டம் –
🇸 பச்சிலைப்பள்ளி அரும்பொருட் காட்சியகம்
🇹 அரும்பொருள் காட்சியகம்
திறப்பு விழாதொடர்பான செய்தியை பார்வையிட link

நாவற்குழியில் எழுந்துவரும் எம் தேச அடையாளம்.!


கடந்த வருடம் இகுருவி நிகழ்வு -முள்ளிவாய்க்கால் பத்தாவது நினைவு நிகழ்வாக நிகழத்தியிருந்தோம் .நிகழ்வில் அவரது உரை காணொளி வெறுமனே 45 நிமிடங்கள் கேளுங்கள்

எமது அழைப்பின் மே மாதத்தில் , தாயக மனிதாபிமான உதவிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி புலம் பெயர் மக்கள் மனங்களில் புதிய வெளிச்ச்த்தை ஏறப்படுத்தினார்,
எங்கள் நன்றிகளும் வாழ்த்துக்களும் ,பிராத்தனைகளும் சிவபூமி அறக்கட்டளையினருக்கு உரித்தாகட்டும்