சம்மேளனத்துக்கு நிரந்தரமான கட்டிடம் ஒன்றை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் சாந்தா பஞ்சலிங்கம்..

உரமேறிய மனிதர்களின் உழைப்பால் உயரந்துநிற்கும் விவசாய பூமி உரும்பிரயாய்.அந்த மண்ணில் பிறந்து வறுமையோடு போராடி இன்றுவாழ்வின் உயரத்தை தொட்டு நிற்கும் ஒரு மனிதனின் கதை இது.

ரொறன்ரோ பெருநகரில் வாழும்தமிழர்கள் பலருக்கும் பரீட்சயமானபெயர் சாந்தா பஞ்சலிங்கம். சாந்தா பஞ்சலிங்கம் என்ற மனிதரை இங்கு வாழும்தமிழ் மக்களில் பெரும்பாலனவர்கள் அறிந்திருக்கின்றார்கள்.

இங்கு வாழும் மக்களின் மின்சார திருத்தவேலைகளையு ம் (Electrical Works) நீர் விநியோக பிரச்சினைகளையும் (Plumbing)  தீர்த்து வைக்கும் மந்திரவித்தை தெரிந்த மனிதர். தொடர்பாடல் வசதிகளோ இணைய சேவைகளோ வந்திராத நாட்களில் சிறப்பான வாடிக்கையாளர் சேவை மூலமாக பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பரீட்சயமானவராக இவர் மாறியிருந்தார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் அந்தமண்ணுக்கே உரித்தான உறுதியான மனிதராக இன்று மாறி நின்றாலும் அவரின் ஆரம்ப நாட்கள் இனிப்பானதாக

இருந்திருக்கவில்லை. உயர்கல்வியை பூர்த்தி செய்த பின்னர் குடுப்பத்தின் வறுமையை போக்குவதற்காக குடும்பத்தின் பாரத்தை தூக்கிச் சுமக்கின்றபெரும் பொறுப்பு இவரை வந்து சேர்கின்றது.

அன்றை நாட்களில் யாழ்நகரில் பிரபலமானமின் திருத்துனராக இருந்த திரு. பொன்னுத்துரை என்பவரிடம் உதவியாளராக இணைந்து மின்சார திருத்த வேலைகளையும், நீர் விநியோக பணிகள் தொடர்பாகவும் பல நுட்பங்களையும்நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

அந்த இளம் வயதில் அவர் கற்றுக் கொண்ட பாடங்கள் கனேடிய பெரு நிலத்தில் அவரை இவ்வளவு உயரத்திற்கு தூக்கி நிறுத்தியிருக்கின்றது என்பதை இப்போதும் பெருமையுடனும்,  நன்றியுடனும் நினைத்துக் கொள்கின்றார்.

தனக்கு பயிற்சியளித்த திரு. பொன்னுத்துரைஅவர்களுக்கு கனேடிய மண்ணில் பாராட்டு விழா நடத்தி பெருமை சேர்த்தவர் சாந்தாபஞ்சலிங்கம். இலங்கையில் இருந்து வெளியேறி வெவ்வேறுநாடுகள் ஊடாக பயணப்பட்டு கனடாவை வந்தடைகின்றார். கனடாவில் உணவகங்களில் பணியாற்றத் தொடங்கி அதில் இருந்து பெற்ற அனுபவங்களின் ஊடாக நட்சத்திர விடுதி ஒன்றின் சமையலறையில் வேலைசெய்யும் வாய்ப்பு கிடைக்கின்றது.

அங்கு பணியாற்றிய போது அந்த விடுதியில் ஏற்பட்ட மின்சார திருத்த வேலைகளில் தனது நிபுணத்துவத்தை இவர் வெளிப்படுத்தும்வாய்ப்பு கிடைக்கின்றது. அவரிடம் மறைந்திருந்த திறமைகளை அவதானிந்த அந்த விடுதியின்பராமரிப்பு முகாமையாளர் சமையலறையில் இருந்து பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக  சாந்தா பஞ்சலிங்கத்தைமாற்றி விடுகின்றார். சாதாரண பராமரிப்பு உதவியாளர் நிலையில் இருந்து பராமரிப்பு முகாமையாளர் என்ற நிலையை குறுகிய காலத்தில் அடைவதற்கும், உயர்வதற்கும் அவரின் அர்ப்பணிப்பும் கடமை உணர்வுமே காரணமாகும்.

 இந்தக் காலப்பகுதியில் இவருக்கு ஏற்பட்ட நல்லதொடர்புகளால் துரித உணவுச் சாவடிகள் சிலவற்றை பெற்றுக் கொண்டு முன்னேறும் வாய்பினையும்அவர் ஏற்படுத்தினார். ஒரு மின்சார திருத்துனராக (Electrician / Plumber) அடையாளம் காணப்படும் சாந்தபஞ்சலிங்கம் முன்னணி துரித உணவகங்கள் சிலவற்றை சொந்தமாக வைத்திருக்கும் ஒருவர் என்பதும் அவற்றின் மூலமாக பலருக்கு வேலைவாய்பினை வழங்கி வரும் ஒரு தொழில் முனைவர் என்பதும் பலருக்கு தெரியாத உண்மை.
தான் வாழும் கனேடிய தமிழ் சமூகத்திற்கும்,தாயகத்தில் வாழும் மக்களுக்கும் பல்வேறு உதவிகளை சத்தமின்றி சாந்த பஞ்சலிங்கம்செய்து வருகின்றார்.
இங்கு நடைபெறுகின்ற பல்வேறு சமூக நல செயல்திட்டங்களிலும் சாந்தா பஞ்சலிங்கம் அவர்களின் பங்கு  எப்போதும் இருந்துவருகின்றது. நினைத்த காரியத்தை நடத்தி முடித்து விடவேண்டும் என்ற போராட்ட குணமே தன்னை இந்த நிலைக்கு  உயர்த்துவதற்கு உதவியதாகஅவர் குறிப்பிடுகின்றார்.
கனேடியத் தமிழர் வரத்தக சம்மேளனத்தின்தலைவராக தனது இரண்டாவது பருவகாலத்தை தொடரும் சாந்த பஞ்சலிங்கம் வர்த்தகசம்மேளனத்தின் பல்வேறு செயல் திட்டங்களில் தன்னை தொடர்ச்சியாக ஈடுபடுத்திவந்துள்ளார்.
20 வருடங்களுக்கு மேலாகவர்த்தக சம்மேளனத்தில் அங்கம் வகித்து வரும் சாந்தா பஞ்சலிங்கம் 30 வருடத்தை தொடும் கனேடியத்தமிழர் வர்த்தக சம்மேளனத்திற்கு நிரந்தரமான கட்டிடம் ஒன்றை பெற்றுக் கொடுத்த விடவேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்பதே எமது வேண்டுதலாக இருக்கின்றது.
 கனேடிய வர்த்தக சம்மேளனத்திற்கு நிரத்தரமானகட்டிம் ஒன்று ஏன் அவசியம் ? இகுருவியின் சிறப்பு விருந்தினர் பகுதிக்காககனேடிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சாநதா பஞ்சலிங்கம அவர்களை ஒரு பனிப் போர்த்தியமாலைப் பொழுதில் சந்தித்தோம். பொதுவாக விருந்தினர்களிடம் கேள்விகளைபத்திரிகைக்காரர்கள் கேட்பதில் இருந்து தான் உரையாடல் ஆரம்பிக்கும். ஆனால், இந்த தேநீர் சாலை சந்திப்பில் சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் கனேடிய வர்த்தகசம்மேளனத்திற்கு ஒரு நிரந்தர கட்டிடம் தேவை என்பதை நீங்கள் உணர்கின்றீர்களா என்று எங்களிடம் கேள்விக் கணை தொடுத்தவாறே உரையாட தொடங்கினார்.
  கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம்
 
 கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்கள் நிறைவு பெறப் போகின்றது.பல்வேறு ஏற்ற இறக்கங்கள், விமர்சனங்கள், வெற்றிகள், தோல்விகள், அவமானங்கள் எனபலவற்றையும் தாண்டி அது பயணித்துக் கொண்டிருக்கின்றது. அது ஒரு காட்டாறு அதன் பயணத்தில் பலரும்இணைந்து கொள்வதும், பின்னர் இறங்கிக் கொள்வதும், மீண்டும் ஏறிக் கொள்வதுமாக இருக்கின்றார்கள். ஆனால் இது எதனைப் பற்றியும் கவலைப்படாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. தமது அடையாளங்களை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வதற்கான ஒரு முயற்சியாகவே கட்டிடங்கள் பார்க்கப்படுகின்றன.
ஒரு நிரந்தரக்கட்டிம் அமையுமாக இருந்தால் அந்த அமைப்பு வேறு ஒரு நிலைக்கு தரம் உயரும். அந்த அமைப்பின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என்பது சாந்தா பஞ்சலிங்கம் அவர்களின் நம்பிக்கை. தமக்கே நிரந்தரமான அலுவலகமோ, கட்டிமோ இல்லாத ஒரு வர்த்தக சம்மேளனம் தனது அங்கத்தவர்களுக்கு எவ்வாறு நல்ல வழிகளை காட்ட முடியும் என்ற கேள்விக்கு எங்களிடம்பதில் இல்லை. வர்த்தக சம்மேளனம் என்பது ஒரு சமூகத்தின் மிகப் பிரதான பாத்திரம் வகிக்க வேண்டிய ஒரு அங்கம். குறிப்பாக பல்லின சமூகங்கள் கூடி வாழும் கனடா போன்றதேசத்தில் ஒரு சமூகத்தின் பலத்தை  தீர்மானிப்பது அந்த சமூகத்தின் வர்த்தகமுயற்சிகளும், கலை கலாசார பாரம்பரியங்களும் தான்.
துரதிஷ்டவசமான தமிழ் சமூகம் தனதுஅடைளங்களை வெளிப்படுத்துவதற்கு வக்கற்ற நிலையில் தான் இன்றும் நின்று கெhண்டிருக்கின்றது. தனி மனிதர்களாக பல சாதனைத் தமிழர்கள் இந்தமண்ணில் வலம்வந்து கொண்டிருந்தாலும், தமிழ் சமூகமாக நாம் தலை நிமிர்வதற்கும், இது எமது சமூகத்தின் அடையாளம் என்றும் சொல்வதற்கும் ஒரு செங்கல்லை கூட காட்ட முடியாதஅவலம் தான் இன்றும் தொடர்கின்றது. பெரும்பலம் படைத்த வர்த்தக முயற்சிகளை வெற்றிகரமாக நடத்தி வரும் தமிழ் சமூகத்தின் வளர்ச்சியினையும், பெருமையினையும் மற்றைய சமூகங்கள் புரிந்து கெள்வதற்கும் எமது அடுத்த தலைமுறை நம்பிக்கையோடு பயணப்படுவதற்கும் கனேடியத் தமிழர் வர்த்தகசம்மேளம் பலம் மிக்கதான நிலையை அடைய வேண்டும். இது இங்கு வாழும் பலருடைய ஏக்கம்.இதனை அடைவதற்கு முதலில் ஒரு நிரந்தரமான கட்டிடம் வர்த்தக சம்மேளனத்திற்கு அவசியம்.
அந்த கட்டிடத்தில் வர்த்தக சந்திப்புகளைநடத்தக் கூடியதாகவும், ஒன்று கூடல்கள், சிறு கண்காட்சிகள், பயிற்சிப் பட்டறைகளைநடத்துவதற்கான ஏற்பாடுகள் கெhண்டதாகவும் அது அமைய வேண்டும். வர்த்தக முயற்சியாளர்கள் தமக்கு வேண்டிய உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொள்வதற்கும், ஆலோசனைகளை பெறுவதற்கும் நாடிச் செல்லக்கூடிய ஒரு முகவரியாக அது அமையும்.

இளம் தலைமுறையினர் எமது சமூகத்தின்வளர்ச்சியினை புரிந்து கொள்வற்கான ஆவணங்களையும், சாட்சியங்களையும் காட்சிப்பதிவுகளையும் கொண்டதாக இது இருக்கும். தமிழர்கள் சமூகம் குறித்த தெளிவானபுரிதலையும் அதன் வர்தக மேம்பாட்டு வளர்ச்சியினையும் எடுத்துக்காட்டக் கூடியவாறுஅந்த கட்டிடம் வடிவம் பெறும். 5000 க்கும் அதிகமான வர்த்தகமுயற்சிகள் கனேடியத் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பெரியநிறுவனங்கள் அரசாங்கங்களுக்கான பொருட்களையும், சேவைகளையும் வழங்கும் நிறுவனங்களில் இருந்து தனிநபர் வியாபார முயற்சிகள் வரை பலதரப்பட்ட வர்த்தக முயற்சிகளை தமிழ்சமூகம் இங்கு முன்னெடுத்து வருகின்றது. அவற்றை பிரதிபலிப்பதற்கும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட விரும்புகின்ற புதியவர்களுக்கு அது குறித்த அறிவூட்டல்களை வழங்குவதற்குமான ஒரு இடமாக இந்த வர்த்தக சம்மேனம் மாற்றமடையும். இங்கு சென்றால் தமக்கு  வேண்டிய உதவிகளை பெற்றுக்கெhள்ள முடியும் என்றநம்பிக்கை தமிழ் வர்த்தக முயற்சியாளர்கள் மத்தியில் ஏற்படுவதற்கு இந்த நிரந்தரகட்டிடம் உதவியாக அமையும் என்று கூறிகின்றார் சாந்தா பஞ்சலிங்கம்.

ஒரு முயற்சியை தெடங்கும் போது சிறந்த தலைவன் தன்னை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள்தனது பங்களிப்பாக இந்த கட்டிடம் அமைவதற்கு 50,000 டொலர்களை வழங்குவதாகஅறிவித்துள்ளார்.  மற்றவர்களின் நி

திஉதவியினை பெற்றுத் திட்டங்களை நிறைவேற்றி விட்டு அதில் பெயர் எடுத்து குளிர்காயும் தலைவரகளின் மத்தியில் தான் முன்னெடுக்கும் திட்டத்திற்கு தனது பங்கினை அறிவித்துவிட்டு அதற்கான  முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றார். இந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர்வர்த்தக சம்மேளனத்திற்கு நிரந்தரமான கட்டிடம் ஒன்றை பெற்றுக் கொடுக்கும்  முயற்சி வெற்றி பெறவேண்டும் என்பது அவரின் தளராத நம்பிக்கை.

ஏற்கனவே பல வர்த்தக முயற்சியாளர்கள் இதற்கான தமது பங்களிப்பை அறிவித்துள்ளப் போதிலும், அவர்களிடம் இருந்து இதுவரை நிதி பங்களிப்பை வர்த்தக சம்மேளனம் பெற்றுக் கொள்ளவில்லை. கட்டிடம் தெரிவு செய்யப்பட்டுஉறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அதற்கான நிதி உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார். நிதி உதவிகளை பெற்று விட்டு பின்னர்திட்டங்களை செயல்படுத்தாமல் காலதாமதப்படுத்தும் முயற்சிகள் மக்கள் மத்தியில்அதிருப்தி நிலையினை ஏற்படுத்தி விடும் என்பதால் இந்த முடிவில் தான் உறுதியாகஇருப்பதாகவும் சாந்தா பஞ்சலிங்கம் குறிப்பிடுகின்றார்.
தாயகத்திலும், இங்கும் பல சமூக நலத்திட்டங்களுக்குஎன சேகரிக்கப்பட்ட நிதி “தனியார் கணக்குகளில்” அல்லது “பிரத்தியேககணக்குகளில்” கடந்த பல வருடங்களாக வைக்கப்பட்டிருப்பது  மக்கள் மத்தியில் பல்வேறுசந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றது.
இதன் காரணமாக உண்மையில் அக்கறை கொண்டுள்ளபலரும் தமது ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு தயக்கமாக  நிற்கின்றார்கள். கனேயடி வர்த்தக சம்மேளத்தின் தலைவர் சாந்தாபஞ்சலிங்கம் அவர்களின் இந்த முன்மாதிரியை அனைவரும் பின்பற்றினால் எமது சமூகத்தில் தோன்றியுள்ள அதிருப்தி நிலை நீங்கும் என்பதோடு பல நலல முயற்சிகளையும் முன்னெடுக்க முடியும்.
நினைத்தை நடத்தி முடிக்கும் திறனும் அதற்கான ஆற்றலும் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் ஒன்று சேர்ந்து உருவாகிய சாந்தா பஞ்சலிங்கம் என்ற இந்த மனிதனின் இந்த கனவு வெற்றி பெற வேண்டும். இது ஒரு தனி மனிதனின் கனவுமட்டுமல்ல; ஒரு சமூகத்தின் எதிரபார்ப்பு. நாளைய சந்ததிக்கான ஒரு சிறந்த தொடக்கப்புள்ளி. இந்த முயற்சி பெறவும் கனேடியத் தமிழ் வர்த்தக சம்மேளனம் தனது 30 வது ஆண்டை கொந்த கட்டிடத்தில்கொண்டாட வேண்டும் என்றும் இகுருவி வாழ்த்துகின்றது.