வேலொடு விளையாடி இருக்கிறீர்களா ?

சிலர் கனடாவில் குழந்தைகளை காம்பிங் (camping ) க்கு குழந்தைகளை அனுப்புவது இயல்பு .அது சாதாரண ஒருநாள் காம்பிங் முதல் ராணுவத்திலோ அல்லது வேற்று நாட்டிலோ தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கோ சிறுவர்களை அனுப்பி பல நாட்கள் பயிற்சி கொடுப்பார்கள் . பாண்டவர் முதல் தற்போதய அரச குடும்பங்களும் இவற்றையே நடைமுறையில் வைத்துள்ளார்கள் .

நம்ம நாட்டிலும் இது நடைமுறையில் இருந்தது . இப்போதும் இருப்பதாக நம்புகின்றேன் ??

செல்வ சன்னதி திருவிழா வந்துவிடடாள் , எனக்கு ஐந்து வயதிலிருந்து
நாட்டைவிட்டு வெளிக்கிடும் 20 வயது வரை , சில மைல் தொலைவில் உள்ள செல்வ சந்நதி கோயிலில் கொண்டு சென்று குடுப்பதிலிருந்து தனியே பிரித்து விட்டுவிடுவார்கள் . இதை ” பூ தொண்டர்கள் ” என்று அழைப்பார்கள்

தனியே வேட்டியும் சால்வையும் உடன் திருவிழா ஆரம்பிக்கும் முன்னர் தீர்த்தம் குடித்த பின்னர் ( மாட்டு சலம் . சாணம் போன்றவற்றினால் செய்தது ) 17 நாட்களும் அங்கேயே தங்க வேண்டும்

சரியான இறுக்கமான கட்டுப்பாடுகள் இருக்கும் , கோவிலில் தரும் உணவைமட்டுமே உண்ணவேண்டும் , வீடுகளுக்குள் செல்லக்கூடாது , புகைத்தல் , மதுபானம் , உற்பட கடையில் வாங்கும் கச்சான் ஐஸ்கிரீம் முதல் அன்னதானம் வரை எதுவுமே உற்கொள்ளக்கூடாது . ஷேர்ட் அணியமுடியாது , எண்ணெய் மற்றும் சீப்பு ( Comb )தலையில் பாவிக்கக்கூடாது . பூ அறைக்குள் வேலை செய்யும் போது ஒருவரோடு ஒருவர் கதைக்கவே கூடாது

சன்னதி முருகனுடன் 17 நாட்களும் பொழுதை கழிக்கவேண்டும் . சிறுவர்கள் முதல் வயதில் முதியவர்கள் வரை பலர் இந்த தொண்டு பணியை செய்வார்கள் . பாண்டவர்கள் முதல் சுற்று வட்ட கிராமங்களில் உள்ள துரியோதன குழந்தைகளையும் நேத்திக்கு பெற்றோர் ஒப்படைப்பார்கள் . அவர்களிடமிருந்தும் பல விடயங்களை கற்றுக்கொள்ளளாம் ஐந்து வயதிலிருந்து வருடத்துக்கு 15 நாள் “வேல் வனவாசம்” தான் .

வேலவனுக்கு பூ எடுப்பது முதல் ,சாத்துப்படி , மாலை கட்டுதல் ,தியானம் , விரதம் , சமூக சேவை , பாமர எளிய மக்களுடன் பழகுதல் , ஞானிகளுடன் பேசுதல் , கோயிலை பெருக்குதல், கடின வேலைகள் , சமையல் வரை எல்லாமே பயிற்சியாகும் . ஆற்றிலேயே நீராடி கோயில் வீதியிலேயே உறங்கி தொண்டு செய்யவேண்டும் , வேலவனும் எங்களோடு ஒருவனாக விளையாடுவர் என்று ஐதீகம் சொல்லுகின்றது . இறுதியாக 17ம் நாள் வீடு செல்லும் போது அம்மா நிறைகுடம் வைத்து வரவேற்பார் . அயலவர்களுக்கு பலகாரம் கொடுத்து மகிழ்வோம் . மகன் குருகுல பாசறை சென்றுவந்த “கெத்து ”

சிறுவயதில் எரிக்கப்பட்ட சித்திரத்தேர் வரை , சண்டை காலம் வரை , அக்கரையில் ராணுவமும் , இக்கரையில் புலிகளும் உள்ள காலத்திலிலும் எனது பெற்றோர்கள் பூ எடுக்க அனுப்ப தவறவில்லை .
ஆனால் கனேடிய வாழ்வில் எமது மகனுக்கு இப்படியொரு “குருகுல வாழ்வை ” திருப்பிக்கொடுக்கமுடியவில்லை . யுத்தம் ஏற்படுத்திய கோபத்தில் அந்த பக்தியையும் தேடமுடியவில்லை .
இப்போது என் மகனுக்கு செல்போனிலும் , டிவி கேம் இலுமிருந்து ஒரு 15 நாலாவது விடுதலை கொடுத்து அந்த “வேலை” கொடுக்கமுடியவில்லை

என் மகனுக்கு ” வேல் ” என்று பெயர் வைத்ததை தவிர .(vel navajeevan)

அந்த சன்னதி வேலவன் மக்களில் ஒருவனாக நீக்கமற நிறைந்திருப்பதால் அவனை அடையாளம் காண்பதற்கு ஒரு பக்குவம் வேண்டும் . அந்த பக்குவ சூழல் அந்த “வேல் சன்னதி ”

சன்னதி திருவிழா நினைவுகளுடன்

நவஜீவன் அனந்தராஜ்

(செல்வ சன்னதி திருவிழா 7 செப் 2019 அன்று facebook )