அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொல்லை – இந்திய வாலிபர் கைது

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தவர் லோகேஷ் நாயக். (வயது 35). இந்தியரான இவர் கடந்த ஆகஸ்டு மாதம் தன்னுடன் பணியாற்றி வந்த அமெரிக்காவை சேர்ந்த 24 வயதான பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது தொடர்பான புகாரின் பேரில் கடந்த 8-ந்தேதி லோகேஷ் நாயக்கை ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து, காணொலி காட்சி மூலம் அமெரிக்க நீதிபதி முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, விசாரணைக்காக லோகேஷ் நாயக்கை அமெரிக்காவுக்கு அழைத்து வரும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அவரை ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்றனர். அங்கு நேற்று அவர் நியூ ஜெர்சி மாகாண கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பாலியல் தொல்லை தொடர்பாக அவர் மீது 2 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.