சிங்கமலை காட்டுத் தீ – ஹெலிகொப்டர் மூலம் தீயை அணைக்க நடவடிக்கை

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் சிங்கமலை காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது.

இன்று (13) காலை பரவிய தீ காரணமாக குறித்த காட்டுப்பகுதியில் சுமார் 5 ஏக்கர் வரையான நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

யாராவது விஷமிகள் தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக ஹட்டன் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

ஆனால் இன்று மாலையும் குறித்த காட்டுப்பகுதியில் தீ பரவிய வண்ணமே காணப்பட்டது.

தீயை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் விமானப் படையினரின் உதவி பெறப்பட்டு ஹெலிகொப்டர் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியும் கிடைத்தமை குறிப்பிடதக்கது.