பொஸ்கொ வித்தியாலய மாணவர்களுக்கான சிறகுகள் இயற்கை விவசாய வாரம்

🌿🐛இயற்கை விவசாய வாரம் 2020 ஜனவரி 08 – 14 🌿🐛 “பயிர்களைக் காப்போம் உயிர்களைக் காப்போம்” “Protecting Plants Protecting Lives” இன்றைய

சிறகுகள் அமைய யாழ் மாவட்ட நிர்வாக பிரிவின் ஏற்பாட்டில் யாழ் புனித ஜோன் பொஸ்கொ வித்தியாலய மாணவர்களுக்கான சிறகுகள் செயற்பாட்டாளர்களால் இயற்கை விவசாய வாரத்தில் (தை 8-14) குறித்த செயலமர்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவர்களுக்காக சூழல் நேய கருத்தமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

ஆரம்ப பிரிவு மாணவர்களிடையே மரம் வளர்ப்பு, பொலித்தீன் பாவனை குறைப்பு, மற்றும் சூழல் நேய எண்ணங்களை மனதளவில் கருத்துருவாக்கம் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடாக அமைந்தது.