மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடுகளுக்கு தீர்வு

மார்ச் மாத நிறைவிற்கு முன்னர் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளுக்கு தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர்  ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு இலவசமாக கண்வில்லைகள் வழங்குவதன் மூலம் பாரிய சேவை முன்னெடுக்கப்படுகிறது.

புற்று நோயாளர்களுக்குத் தேவையான மருந்து பொருட்கள் மூன்று தடவைகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.