இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1620 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த 7 பேரும் கட்டாரில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 829 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.