ஆதின தலைமை இந்துமத சுவாமியிடம் ஆசிர்வாதம் பெற்ற இராணுவ தளபதி

யாழ் நல்லை திருஞானசம்பந்தர் ஆதினத்தின் தலைமை சுவாமியான ஶ்ரீ லா ஶ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமச்சாரிய அவர்களை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று (20) அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து சுவாமியிடம் ஆசிர்வாதத்தையும் பெற்றுக் கொண்டார்.

இவர்கள் இருவரது இச்சந்திப்பின் போது பொது விடயங்கள் தொடர்பான விடயங்களை பரிமாறிக் கொண்டனர்.

சுவாமி அவர்கள் கருத்து தெரிவிக்கையில், சமூக நலன்புரி திட்டங்களுக்கு யாழ் பாதுகாப்பு படையினரால் வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் இராணுவ தளபதிக்கு தெரிவித்தார்.

இறுதியில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இராணுவ தளபதி சுவாமிக்கு பரிசொன்றையும் வழங்கி வைத்து கௌரவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதியுடன் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவும் இணைந்திருந்தார்.

பின்பு இராணுவ தளபதியவர்கள் நல்லூர் கோயிலிற்கு சென்று பூஜையிலும் இணைந்து கொண்டு நல்லூர் பெருமானின் ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.