பிலிபைன்ஸ் செல்ல உள்ளார் ஜனாதிபதி மைத்திரி சிறிசேன

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிபைன்ஸுக்கு செல்ல உள்ளார்.

பிலிபைன்ஸ் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இம்மாதம் 15ம் திகதி ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ஒருவர் பிலிபைன்ஸுக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், இம்மாதம் 15 முதல் 19ம் திகதி வரையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளது.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.