சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்

ஊதிய உயர்வு, பணியிடத்தில் சமத்துவம், பாலியல் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு போன்றவற்றை வலியுறுத்தி சுவிட்சர்லாந்து பெண்கள் வேலை  நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்களுக்கு நிகராக சம ஊதியம் கேட்டு பெண்கள் சுவிட்சர்லாந்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
28 ஆண்டுகளுக்கு பிறகு சுவிட்சர்லாந்தில் நடைபெறும் மிகப்பெரும் போராட்டம் இதுவாகும். சுவிட்சர்லாந்தில், சராசரியாக ஆண்களை விட பெண்கள் 20 சதவீதம் குறைவாக சம்பளம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.