கொரோனா வைரஸ் சோதனை

1. எப்படி ஒரு நோயாளியின் இருந்து மாதிரி எடுக்கப்படுகின்றது?

ஒருவரின் மூக்கு அல்லது அடித்தொண்டையில் இருந்து ஒரு பிரத்தியேகமான swipe மூலம் இம்மாதிரி எடுக்கப்படுகின்றது.

2. கொரோனா வைரஸ் சோதனை எப்படி செய்யப்படுகின்றது?

COVID-19 வைரஸை சோதிப்பதற்கு Polymerase Chain Reaction (PCR) என்றோரு தொழில்நுட்பம் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் பாவிக்கப்படுகின்றது. இதே தொழிலநுட்பமே எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் சி மற்றும் இன்ஃப்ளூயன்ஸாஸ் உள்ளிட்ட பல வைரஸ்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வைரஸின் மரபணுவை (DNA) பெருக்கி இதை தங்களிடம் உள்ள மாதிரியுடன் ஒப்பிட்டு இப்பரிசோதனை செய்யப்படுகின்றது.

3. இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?

அவுஸ்திரேலியாவில் இதற்கு உண்மையில் 6 மணித்தியாலங்கள் எடுத்தாலும் , ஒருவரில் மூக்கு அல்லது தொண்டையில் இருந்து மாதிரி எடுத்ததில் இருந்து அதன் முடிவு அவருக்கு அறிவிக்கப்படுவதற்கு 48 மணியிலிருந்து 72 மணி ஆகின்றது.

4. வேறு துரித முறைகள் உள்ளனவா?

15 நிமிடத்தில் செய்யக்கூடிய சில சோதனைகளும் உள்ளன. ஆனால் அவை துல்லியமானவையல்ல. அவை வைரஸை அல்லாமல் அவற்றின் antibody ஐ சோதிக்கின்றன.