திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு மார்ச் 25ம் திகதி

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மார்ச் 25ம் திகதி அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பிரதிவாதியின் சட்டத்தரணி விடுத்த கோரிக்கை்கு அமைவாக இம்மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 10 ஆம் திகதி வரை திஸ்ஸ அத்தநாயக்க வௌிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஜனாதிபதி காலத்தில் தவறான ஆவணம் ஒன்றை தயாரித்து, அதனை ஊடகங்களுக்கு வௌியிட்டமை தொடர்பில், திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.