இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (12) சிநேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் இந்த சந்திப்பு தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்கால அரசியல் பயணத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாக கூறினார். அத்துடன் ஆக்கப்பூர்வமான விடயங்கள்

கலந்துரையாடப்பட்டதாகவும் அரவிந்தகுமாரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர்களான வே.இராதாகிருஸ்ணன், பழனி திகாம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுக்குமார், உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச் செயலாளர் சந்திரா சாப்டரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டார்.