ரோனிபிளேயர் இயக்கும்; சல்லிக் காசில் சமாதானம் – இப்போது இலங்கையில்

இலங்கைத் தீவில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு முயற்சிகளில் சர்வதேசத்தின் தலையீடுகள் அடிக்கடி நடந்தேறியுள்ளன.

திம்புவில் 1985 ஜூலையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்தைகள் முதல் 2006ம் ஆண்டு ஒக்ரோபரில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஜெனீவாவில் நடைபெற்ற இறுதிப் பேச்சு வார்த்தை வரை சர்வதேச தலையீட்டுடனான சமாதான முயற்சிகள் எவையும் தீர்வுகளை பெற்றுத் தரவில்லை.

சமாதான முயற்சிகளின் தோல்விக்கு பின்னர் “சர்வதேசம்” ஆயுத மோதல்களை முடிவிற்கு கொண்டு வருவதற்குரிய ஆதரவை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியதன் மூலம் மூன்று தசாப்தகால ஆயுத மோதல்களை முடிவிற்கு கொண்டு வந்தது.

இந்த சமாதான முயற்சிகளில் சில தனிநபர்களின் முக்கியத்துவம் கூடுதல் கவனிப்பை பெற்றிருந்தது.

இந்திய சமாதான முயற்சிகளில் ஜே.என்.டிக்சிற், நோர்வே சமாதான முயற்சிகளில் எரிக் சொல்ஹெய்ம், ஜப்பானின் யசூசிஅகாசி என நாம் அறிந்த “சமாதானத்” தூதுவர்கள் எவரும் எமக்கு சமாதானத்தை பெற்றுத் தரவில்லை.

மாறாக ஏராளமான சாவினையும், மாறாத வலிகளையுமே ஏற்படுத்தி விட்டிருந்தார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத வரலாறு.

உலகமயமாதலில் சமாதான முயற்சிகள் என்பது கூட ஒருவகை “வர்த்தகமாக” மாறி வருகின்றது. குறிப்பாக சமாதான முயற்சிகளில் அனுசரணை வழங்கும் நாடுகளின் வெளி விவாகர கொள்கைகளுக்கு அப்பால் அந்த நாடுகளின் பொருளாதார நலன்சார் விடயங்கள் அதிக முக்கியத்தும் பெற்றுள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது.

இந்த பின்னணியில் பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரோனி பிளேயரின் இலங்கைக்கான இரண்டு விஜயங்கள் புதிய கேள்விகளையும் சலசலப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.

கடந்த வாரம் பிரித்தானிய பத்திரிகைகளில் ஒருசெய்திஅடிப்பட்டது. றுiனெசரளா ஏநவெரசநள டுவனஇ என்றபிரித்தானிய நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அதன் வருடாந்த நிதிநிலை அறிக்கையில் தமது நிறுவனம் கடந்த வருடத்தை விட மூன்று மடங்கு அதிக இலாபத்தை ஈட்டியுள்ளதாகவும் இதனால் தமது பணியாளர்களின் சம்பளத்தை 35000 பவுண்ட்ஸில் இருந்து 103,000 புவுண்ட்களாகஉயர்த்தியுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படடிருந்து.

இந்த நிறுவனம் கடந்தநிதிஆண்டில் 2.6 மில்லியன் பவுண்ட்களை இலாபமாக ஈட்டியுள்ளது என்பதும் அது கடந்த வருடத்தின் இலாபத்தை விட மூன்று மடங்கு அதிகமானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இத்தனைப் பெரிய இலாபத்தை ஈட்டுவதற்கு இந்த நிறுவனம் என்ன வியாபாரத்தில் ஈடுபடுகின்றது என்ற கேள்வி உங்களைப் போலவே எனக்கும் எழுந்தது.
இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள வியாபாரம் அரசாங்கங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் ஆலாசனை வழங்குவது. இந்த நிறுவனத்தின் தலைவர் அல்லது உரிமையாளர் ஷரொனி பிளேயர். ஆம்… தற்போது இலங்கையின் சமாதான முயற்சிகளின் புதிய மத்தியஸ்த்தமுகம் முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரொனிபிளேயர்.

இப்போது நான் முதலில் குறிப்பிட்ட சமாதான முயற்சிகளின் வர்த்தக நோக்கங்கள் புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.

இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவாகர அமைச்சர் மங்கள சமரவீசர மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க அம்மையாரும் இலங்கையின் சமாதன முன்னெடுப்புகளுக்காக அழைத்து வந்துள்ள புதிய சமாதானத் தூதுவர் ரொனிபிளேயர்.

கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகை தந்தபோது அவர் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார். அதன் பின்னர் இந்த வருடம் ஜனவரி 3ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான ராஜவதோதயன் சம்பந்தன் அவர்களை சந்தித்துள்ளார்.

ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையான காலப் பகுதியில் ரொனிபினேயரின் “நிறுவனம்“; இலங்கை அரசாங்கத்தின் தீர்வுப் பொதியை எப்படிசம்பந்தன் ஜயாவிற்கு வழங்கலாம் என்பது பற்றி விரிவாக ஆராய்ந்தது.

அதன் பின்னர் சம்பந்தன் ஜயாவிற்கு ஏற்ற மாதிரியாக வடிவமைக்கப்பட்ட அட்டகாசமான வர்ணக்காகிதங்கள் சுற்றப்பட்ட பொதியுடன் வந்திறங்கிய ரொனிபிளேயஸ் சிலோன் ரீயை பருகியவாறு அந்த பொதியை சம்பந்தன் ஜயாவிடம் கொடுத்திருக்கின்றார்.

அந்த பொதிக்குள் என்ன இருந்தது என்பது இன்னும் கொஞசநாளில் வெளியில் வரும் அதுவரைநாமும் பொதி பற்றி கதைக்காமல் பொத்திக் கொண்டிருப்பது தான் நல்லது.

இலங்கைத் தீவில் ரொனிபிளேயர் அவர்களின் வகிபாகம் என்பது இலங்கை அரசாங்கம் தொடர்பில் சர்வதேச அளவில் நிலவும் தவறான அபிப்பிராயங்களைகளையும் நோக்கம் கொண்டது என்பதை அவர் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றார்.

இரண்டு வார கால பயணம் மேற்கொண்டு தனது குடுமப்த்தினருடன் ரொனிபிளேயர் இலங்கைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொண்ட விஜயம் அவரது தனிப்பட்ட விஜயமாக காண்பிக்கப்பட்டது.

ஆனால்,  அவர் தனது விஜயத்தின் போது நிகழ்த்திய லக்ஸ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த உரையும் அது தொட்டுச் சென்ற விடயங்களும் இலங்கை அரசாங்கத்தின் சிறப்பு அதிதியாகவே அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பதை உறுதிப்படுத்தியது.

இலங்கைத் தீவில் ரொனிபிளேயர் அவர்களின் வகிபாகம் என்பது இலங்கை அரசாங்கம் தொடர்பில் சர்வதேசஅளிவில் நிலவும் தவறான அபிப்பிராயங்களைகளையும் நோக்கம் கொண்டது என்பதை அவர் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றார். ‘வுhந கழசஅநச டீசவைiளா Pசiஅந ஆinளைவநச வுழலெ டீடயசை ளயனை வாயவ hந றடைட ளவயனெ டில ளுசi டுயமெய வழ உழசசநஉவ வாந அளைஉழnஉநிவழைளெ யடிழரவ வாந உழரவெசல றiவாin வாந iவெநசயெவழையெட உழஅஅரnவைல.வுhந கழசஅநச டீசவைiளா Pசiஅந ஆinளைவநச கரசவாநசஅழசந நஒpடயiநென வழ வாந Pசநளனைநவெ சநபயசனiபெ வாந pழளளiடிடைவைநைள ழக iஅpடநஅநவெiபெ iவெநசயெவழையெட pசழபசயஅள ழக வுழலெ டீடயசை குழரனெயவழைn in உழடடயடிழசயவழைn றiவா ளுசi டுயமெய. – ( ளுழரசஉநாவவி:ஃஃறறற.pசநளனைநவெ.பழஎ.டமஃ)
இந்த வருடஆரம்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் சம்பந்தன் அவர்களிடம் பிளேயர் என்ன பேசியிருப்பார் என்பதை இதில் இருந்து ஊகித்துக் கொள்ள முடியும்.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பும் அதனை மேற்கொள்ள துணைபோன போர்க் குற்றங்களும் தான் இலங்கை மீது சர்வதேசம் முன் வைத்துள்ள தவறான பார்வையின் முக்கியமான விடயங்கள். இவற்றை இல்லாமல் செய்வதற்காக தற்போதையஅரசாங்கத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளார் ரொனிபிளேயர்.

இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் நடத்திய சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானம் அதன் நீட்சியான பொறுப்புடமை மற்றும் யுத்தக் குற்றவாளிகளை இனம் கண்டு சட்டத்தின் முன்நிறுத்தும் செயல்பாடுகள், இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களை மீளளித்தல் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பான விபரங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகத் தரப்பு அறிவித்திருந்தது.

தற்போது ஒரு அரசியல் தலைவராக அல்லாத ஒருவர் தனியார் நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றினை நடத்தி வரும் ஒருவரரோடுதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஏன் இந்த விடயங்களை உரையாட வேண்டும் என்ற கேள்வியினை எவரும் இது வரை எழுப்பவில்லை இது தான் கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம்.

கூட்டமைப்பை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் அல்லது தமிழ் மக்களுக்கான அரசியல் சூழலில் இருந்து கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களை வெளியேற்ற வேண்டும் என்று “ஆசைப்படும்” மாற்று அரசியல் தலைமைகளும் இது குறித்து கவனிக்காதிருக்கின்றார்கள்.

இந்த சந்திப்பினை தொடர்ந்து கடந்த 12ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்கள் தமிழ் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கையினை கை விட்டுள்ளார்கள். இனிஅவர்கள் தனிநாடு கோர மாட்டார்கள் அதனால் தான் அவர்கள் தங்களை ஏகமனதாக தெரிவு செய்துள்ளார்கள் என்று அறிக்கையிடுகின்றார்.

கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்நதன் அவர்களால் மருதனார் மடம் சந்தியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

“தமிழ் மக்கள் தனித் தேசிய இனம் வடக்குகிழக்கு இணைந்ததமிழ் – முஸ்லிம் தாயகப் பிரதேசம் தேசிய இனம் என்ற வகையில் உரித்தான சுய நிர்ணய உரிமை சமஸ்டி கட்டமைப்பின் கீழ் வடக்கு–கிழக்குப் பிரதேசங்களில் வாழும் எந்தவொரு மக்கள் மீதும் முரண்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தாத அதிகாரப் பகிர்வு என்பவற்றை உள்ளடக்கியதோர் அரசியல் தீர்வை தாம் கோருகின்றோம்”. ஆனால், இப்பொழுது பாராளுமன்றத்தில் அரசியலமைப்புசீர்திருத்தம் குறித்துஉரையாற்றும் போது அவரின் வார்தையில் இருந்து இந்த விஞ்ஞாபனத்தில் இடம் பெற்றுள்ள : தமிழர்கள் “தேசிய இனம்” என்பதோ “வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் – முஸ்லீம் தாயகப் பிரதேசம்” என்பதோ“ சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டிக் கட்டமைப்பு“ என்பதோ மருந்தளவில் கூட இடம் பெறவில்லை. மாறாக மகிந்த ராஜபக்சஅவர்கள் ஒருதேசியத் தலைவர் என்றும் அவர் இந்த அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுகின்ற நிலைமாற்றம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து தெளிவாக பேசி அவர்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்று எதிர்கட்சி தலைவராகவும் ஆன பின்னர் தமிழ் மக்கள் பிரிக்கப்பட்டாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழவே விரும்புகின்றார்கள் என்று “பச்சைப்” பொய் சொல்வது ஏன்? என்பது குறித்து வாக்களித்த தமிழ் மக்கள் அறிந்து கொள்ள முனைவதில் தவறேதும் இல்லை.
இதற்கான பதிலைத் தேடும் தமிழர்கள் ரோனிபிளேயர் இயக்கும்; “சல்லிக்காசில் சமாதானம் – இப்போது இலங்கையில் “என்ற வெற்றிகரமான திரைப்படத்தில் நீங்கள் கதாநாயகனா ? வில்லனா அல்லது வெறும் கோமளி வேசம் தானா ? என்ற கேள்வி கூட்டமைப்பினரை பார்த்து எழுப்பப்படுவதும் தவிரக்க முடியாதது தான். ஆனால் தேர்தல் என்பது ஐந்துஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். தோற்றுப் போனவர்கள் எப்போதும் தோற்றுக் கொண்டிருப்பதேயில்லை. அதுபோல் வென்றவர்கள் எல்லாக்காலங்களிலும் வெற்றி பெறுவதும் இல்லை.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்த ஐயாஅவர்கள் மதிக்கும் “தேசியத் தரைவர்” மகிந்த ராஜபக்சவும் அவர் நேசிக்கும் “ரனில் விக்கிரமசிங்கவும்” அவருக்கு மிக அருகில் உள்ள இதற்கான நல்ல உதாரணங்கள் என்பதையும் நினைவில் கொள்வதும் அவசியமாகின்றது.!

– ரமணன் சந்திரசேகரமூர்த்தி