திருகோணமலை மூலோபாய கற்கை நிலையம் கனடிய தமிழ் புலம்பெயர் சமூகத்தினால் கைகொடுக்க முடியாதா? – பிரபாநேசன்

திருகோணமலை மூலோபாய கற்கை நிலையம்
கனடிய தமிழ் புலம்பெயர் சமூகத்தினால் கைகொடுக்க முடியாதா?
பிரபாநேசன்

கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் மூலோபாய கற்கை நிலையம் – திருகோணமலை (Centre for Strategic Studies – Trincomalee) என்னும் பெயரில் இந்தச் சிந்தனைக் கூடம் உருவாக்கப்பட்டது. இதனை அரசியல் ஆய்வாளர் யதீந்திராவும் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கணேசலிங்கவும் வழிநடத்திச் செல்கின்றனர்.  இதன் அங்குராப்பன நிகழ்வில் அப்போது வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த நீதியரசர் விக்கினேஸ்வரனும் பங்குகொண்டிருந்தார். அதே போன்று கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்களும் பங்குகொண்டிருந்தனர். இது தொடர்பில் அப்பிராயம் தெரிவித்திருந்த மூத்த அரசறிவியல் சிந்தனையாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் பின்வருமாறு தெரிவித்திருந்தார். தமிழ் மண்ணில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. நூற்றாண்டுக்கணக்கில் தமிழ் அரசியல் தலைவர்கள் இது பற்றி சிந்தித்ததே கிடையாது என்னும் வகையில் இதற்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு.

இவ்வாறு புகழப்பட்டாலும் கூட, இவ்வாறான சிந்தனைக் கூடங்களை நடத்திச் செல்வது என்பது எளிதான விடயமல்ல. தமிழ்ச் சூழலை பொறுத்தவரையில் நமது மனதின் மேற்பரப்பை தொடக் கூடிய விடயங்களிலேயே நாம் அதிக அக்கறை காண்பிப்பதுண்டு. உதாரணமாக முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு, விதவைகளின் பிரச்சினை. இப்படியான விடயங்களுக்கு கட்டாயமாக உதவத்தான் வேண்டும். அதில் மாறுபடி ஏதுமில்லை. ஆனால் ஒரு சமூகத்தின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்கும் அறிவுபூர்வமான விடயங்களுக்கு உதவுதிலும் புலம்பெயர் சமூகம் பின்நிற்கக் கூடாது. ஆனால் அவ்வாறான முயற்சிகளுக்கு போதிய ஆதரவு நம்மத்தியில் வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாகவே இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடவும் எவரும் துனிவதில்லை. ஆனாலும் சிலரது அர்ப்பணிப்பிலும் துனிவிலும் இவ்வாறானதொரு அமைப்பு திருகோணமலையில் உருவாக்கப்பட்டிருப்பதானது, திருநாவுக்கரசு அவர்கள் கூறுவது போன்று உண்மையிலேயே ஒரு அதிசயம்தான். இவ்வாறானதொரு முயற்சிக்கு நாம் உதவி செய்யாமல் விடலாமா? இவ்வாறான முயற்சிக்கு புலம்பெயர் சமூகம் கைகொடுக்காது விட்டால் நிச்சயம் இந்த முயற்சி ஒரு சில வருடங்களில் தோல்வியை தழுவும். ஏனெனில் இவ்வாறான முயற்சிக்கு தொடர்ச்சியான பொருளாதார பலம் தேவை. அதனை புலம்பெயர் சமூகத்தை தவிர வேறு எவரால் செய்ய முடியாது.
சிந்தனைக் கூடங்களுக்கான முதலீடு என்பது ஒரு சேதத்திற்கான முதலீடு. பத்து லடச்சத்திற்கு மேலான புலம்பெயர் தமிழ் மக்கள் இருந்தும் திருகோணமலையில் நிறுவப்பட்ட, ஒரு சிந்தனைக் கூடத்தை நடத்த முடியாமல் இருக்கின்றனர் என்றால்,!

இன்று பொதுவாக ஒரு அபிப்பிராயம் உண்டு. தமிழ் சமூகம் இவ்வாறான அறிவுபூர்வமான முயற்சிகளுக்கு உதவி செய்யாது. அது உண்மைதானா? மாமனிதர் சிவராம் தனது கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார். பூப்புனித நீராட்டு விழாக்களுக்கும் கேளிக்கை நிகழ்வுகளுக்கும் வாரி வழங்கும் தமிழ் சமூகம் ஆய்வு முயற்சிகளுக்கும் சிறந்த நூல்களை ஆக்குவதற்கும் செலவு செய்ய மறுக்கிறது. இது முற்றிலும் உண்மையான கூற்று. ஆனால் சிங்கள தேசத்தை எடுத்து நோக்கினால், அவர்களோ அறிவூர்வமான விடயங்களின் ஊடாக தங்களை சதா பலப்படுத்திக் கொள்கிறனர். தங்களை புடம்போட்டுக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே ஒரு செழிப்பான ராஜதந்திர பாரம்பரியத்தை அவர்களால் பேணிப்பாதுகாக்க முடிகின்றது. எனவே நமக்கென்று ஒரு ராஜதந்திர பாரம்பரியத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், நாம் முதலில் நம்மத்தியில் சிந்தனைக் கூடங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு கைகொடுக்க வேண்டும். அவர்களை கைவிட்டுவிடக் கூடாது.

இன்று சிங்கள தேசம் தனக்கான சிந்தனைக் கூடங்களையும் அராய்ச்சி மையங்களையும் போதியளவு கொண்டிருக்கிறது. இதன் ஊடாக உலகை உற்றுநோக்கி தன்னை புடம்போட்டுக் கொள்கின்றது. உலகெங்கும் இருக்கும் சிங்கள புலமையளர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றனர். ஆனால் ஒரு தனிநாட்டுக்காக போராடிய தேசத்தால் தனக்கான சிந்தனைக் கூடங்களை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. இன்று கனடாவில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இதில் ஆயிரக்கணக்கான வர்த்தகர்களும் பணபலத்துடன் இருக்கின்ற தனிநபர்களும் இருக்கின்றனர். இவ்வாறானவர்கள் அனைவரும் நினைத்தால் இவ்வாறான சிந்தனைக் கூடங்களை சில வருடங்களிலேயே பலம்மிக்க ஆராய்ச்சி நிலையங்களாக மாற்ற முடியும்.இந்த சிந்தனைக் கூடத்தை வழிநடத்துவோரிடம், பேசுகின்ற போது, அவர்கள் ஒரு யோசனையை வெளிப்படுத்தினர். அது ஒரு நல்ல ஆலோசனையாகவே தெரிந்தது. கனடாவில் நாலுலட்சத்திற்கும் மேற்பட்ட நமது உறவுகள் இருக்கின்றனர். அவர்களில் நூறு பேர் வருடம் ஒன்றுக்கு 200 டொலர்கள் அல்லது இருநூறு பேர் வருடமொன்றுக்கு 100 டொலர்கள் என்றவாறு இந்த அமைப்பிற்கு வழங்கினால் இதனை நடத்திச் செல்வதில் ஒரு தடங்கலும் இருக்காது. மிகவும் திறம்பட இதனை நாம் முன்கொண்டு செல்ல முடியும். ஒரு மாத்திற்கு 16 டொலர்கள் மட்டுமே அவர்கள் தர வேண்டிவரும். இது ஒரு அணுகுமுறை மட்டுமே. நம்மில் பணபலமுள்ளவர்கள் தங்களால் முடிந்ததை செய்யலாம். பணபலமுள்ள பத்து பேரே ஒரு வருடத்திற்கான செலவுகளை பொறுப்பெடுக்க முடியும். அவ்வாறு செய்கின்ற போது, தமிழ்ச் சூழலில், தாயகத்தில் ஆய்வுத் துறைகளில் ஈடுபட எண்ணுபவர்கள் உற்சாகமடைவர். தமிழர் தேசத்திற்கான அறிவூர்வமான ஆய்வுப்பரப்பு விரிவடையும். அரசியலில் இளம் அறிஞர்கள் உருவாகுவர். இன்று அரசியலில் இருப்பவர்களின் தகுதிநிலையைக் கொண்டே, தமிழர் தேசயம் எத்தகைய நிலையில் இருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

புலம்பெயர் சமூகமாகிய நாம், எந்தளவிற்கு இதற்கான நிதிபலத்தை வழங்குகின்றோமோ, அந்தளவிற்கு தாயகத்திலுள்ளவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவர். இவ்வாறான சிந்தனைக் கூடங்களுக்கான முதலீடு என்பது ஒரு சேதத்திற்கான முதலீடு. பத்து லடச்சத்திற்கு மேலான புலம்பெயர் தமிழ் மக்கள் இருந்தும் திருகோணமலையில் நிறுவப்பட்ட, ஒரு சிந்தனைக் கூடத்தை நடத்த முடியாமல் இருக்கின்றனர் என்றால், அது நமக்குத்தான் அவமானம். எனவே இவ்வாறான முயற்சிக்கு கைகொடுக்க வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும். நாம் நமது கடமையை செய்வோம். முடிந்தளவு உதவுவோம். நமது தேசிய உணர்வை காண்பிப்போம். இந்தச் சிந்தனைக் கூடத்தின் நோக்கம் அதன் செயற்பாடுகள் ஆகியவற்றை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணையத் தளத்தின் ஊடாக பார்க்கலாம். இது ஆரம்ப நிலையில் இருக்கின்றது என்பதை கருத்தில் கொள்ளுங்கள். உங்களின் உதவியின் ஊடாகவே அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க எண்ணியுள்ளனர்.

http://www.trincocss.org/
பின்வரும் செயற்பாடுகளை இந்த நிலையம் முன்னெடுக்கவுள்ளது.
ஆய்வுகள் மற்றும் வெளியீடுகள்
இளம் ஆற்றலாளர்களை உருவாக்கும் நோக்கில் ஊடயவியல் மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான ஆரம்ப பாடநெறிகள்
சமூக அரசியல் பொருளாதார முன்னேற்றங்கள் தொடர்பான மகாநாடுகள்
பொதுமக்களுக்கான அரசியல் அறிவூட்டல் கருத்தரங்குகள்.
பின்வரும் தளத்தில் இந்த நிலையத்தின் ஆரம்பக்கட்ட விடயங்களை பார்வையிடலாம்.

தொடர்ச்சி அடுத்த பக்கத்தில்…

உதவி செய்ய விரும்புவோர். இந்த வங்கிக்கணக்கின் ஊடாக உங்களின் நிதியுதவியை வழங்குங்கள்.

Name of the account : Centre for Strategic Studies – Trincomalee (GUARA
Name of the Bank : Hatton National Bank PLC
Branch       : Trincomalee
Account Number : 031010021891
Bank Swift code : HBLILKLX
Bank code : 7083
Branch code : 031

இது தொடர்பில் தங்களின் கருத்துக்களை எழுத அல்லது மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இ.மெயில்கள்; அல்லது கையடக்க இலக்கத்தை தொடர்புகொள்ளுங்கள்.
director@trincocss.org
jjathi@gmail.com

Tel : 0094 777 231 387