Under the Bombs குண்டுகளுக்கடியில்

2009 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் பத்தாண்டு காலம் நிறைவுற்று விட்டது. காணாமல் போனோரைத் தேடும் படலம் இன்னமும் நிறைவடையவில்லை. இப் படத்தைப் பார்க்கும் பொழுது, தமிழினப் படுகொலைகள் நினைவுக்கு வருவதனை தவிர்க்க முடியாமல் உள்ளது.
Under the Bombs  குண்டுகளுக்கடியில்
ரதன்

பாலஸ்தீனிய-இஸ்ரேல் போர் பாலஸ்தீனியத்தை இரு பகுதிகளாக பிரித்துள்ளது. காசா, வெஸ்ட் பாங் என்ற இந்த இரு பகுதிகளும் கலாச்சார மாற்றங்களையும் கொண்டுள்ளன. கமாசின் கட்டுப்பாட்டில் உள்ள காசா தீவிர இஸ்லாமிய கலாச்சாரத்தை கடைப்பிடிக்க மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். குண்டுகள் இவர்களின் விளையாட்டகங்கள் உட்பட்ட பலவற்றை அழித்துவிட்டது. கமாஸ் திரை அரங்குகளை மூடிவிட்டது. இசையை அங்கு அரிதாகவே கேட்கலாம். இஸ்ரேல,; குழந்தைகள் விளையாட்டு பொருட்களை தடை செய்துவிட்டது. கடத்தலில் வரும் விளையாட்டு பொருட்களே குழந்தைகளிடம் உள்ளது. குண்டுகள் குழந்தைகளை கொல்கின்றன. தீவிரவாதிகள் பிள்ளை பிறப்பை அதிகரிக்க உற்சாகப்படுத்துகின்றனர். உலகிலேயே அதிக பிள்ளை பிறக்கும் பிரதேசம் காசாவாகும். இங்கு சராசரியாக 5.1 பிள்ளைகள் ஒரு பெற்றோருக்கு பிறக்கின்றன. பெரும்பாலான மக்கள் வெளி உலகத்தை அறியாதவர்கள். 70 வீதமானேரின் மாத வருமானம் வெறும் ஒரு டொலருக்கு குறைவானவையே. உலகின் முதல் தோன்றிய குடியிருப்புக்களில் காசாவும் ஒன்று கி.மு 3000ம் ஆண்;டளவில் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

2006 கோடை காலம் இஸ்ரேலிய துருப்புக்கள், லெபான் மீது தொடர்ச்சியாக 34 நாட்கள் குண்டுகளை வீசித் தள்ளின. இந்த போருக்கான ஆரம்பம் ஹிஸ்புல்லா படைகளால் என கூறப்படுகின்றது. யூலை 12ம் நாள் இரண்டு இஸ்ரேலிய படை வீரர்களை கைப்பற்றியமையே காரணம் என இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் இதற்கு முன்பாக ஹமாஸ் படைகள், இஸ்ரேலிய இராணுவ அதிகாரி Gilad Shalit  ஜ கைப்பற்றி, பல ஆயிரம் ஹமாஸ் கைதிகளை விடுதலை செய்யக் கோரியது. இதன் தொடர்ச்சியே ஹிஸ்புல்லாவின் நடவடிக்கை. விளைவு இஸ்ரேல் வழமை போல் மக்கள் வாழும் பகுதிகளை நோக்கி குண்டு மழை பொழிந்தது. இதற்கு பதிலளித்த ஹிஸ்புல்லா படைகள் C-802 Silkworm missile  மூலம் இஸ்ரேலிய கப்பலை மூழ்கடித்தது. இறுதியில் ஒரு மில்லியன் அரபு மக்கள் அகதிகளாயினர். பல ஆயிரம் அரேபியர்கள் கொலை செய்யப்பட்டனர்.

இந்த போர் உச்சத்தில் இருந்த ஒரு நாள் பெய்ரூத் வாடகை கார் நிலையம் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. தெற்கு லெபானானை நோக்கி குண்டு மழைகள் பொழிந்த வண்ணமிருந்தன. புல கட்டிடங்கள் வீழ்வதையும் பெரும் புகை மண்டலம் கிளம்பிக் கொண்டிப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்க – ஈராக் போரின் போது இக் காட்சிகளை தொலைக் காட்சியில் பார்த்திருப்பீர்கள். மக்கள் திசை கெட்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். வன்னி இறுதிப் போரை நினைவு படுத்தும் காட்சிகள். குழந்தைகள் பெற்றோரை தேடிக் கொண்டிருந்தன. Zeina (Nada Abou Farhat) வாடகை கார் ஒன்றை தேடிக் கொண்டிருந்தார். பலர் தெற்கு லெபனானுக்கு செல்ல மறுத்து விட்டனர். அனைவரும் டமாஸ்கஸ் வரை செல்லத்தான் விரும்பினர். இறுதியாக ரொனி இதற்கு உடன்படுகின்றார். சினா முதலிலேயே கறாராக ‘எவ்வளவு காசு’ எனக் கேட்கின்றார். 300க்கு உடன் படுகின்றனர். முதலில் 150ம், இறங்கும் பொழுது மிகுதி 150ம் என தீர்மானமாகின்றது. சினா ஓர் இளம் பெண். சுமார் 35 வயது மதிக்கத்தவர். வசீகரமானவர். வுழமையான அரேபிய பெண்களைப் போலல்லாது நாகரீகமாக உள்ளார். தலையைச் சுற்றி துண்டு அணியவில்லை. ரொனிக்கு ஆரம்பம் முதலே சினா மீது ஒரு கண்.

இவர்கள் மிகவும் கடினமான பாதையில் பயணிக்கின்றனர். ரொனி மீண்டும், மீண்டும் கேட்ட பின்னர், சினா தான் தனது மகனையும், சகோதரியையும் தேடிச் செல்வதாக கூறுகின்றாள். ரொனிக்கு வாடகைக் கார் ஓட்டுவதை விட, பகுதி நேரமாக அகதிகளுக்கு மருந்துகள் விற்பனை செய்வதுமுண்டு;. ரொனி, சினாவை முதல் ஒரு முகாமில் விட்டு விட்டு தனது பகுதி நேர மருந்துகள் வாங்க சென்று விடுகின்றார். சினாவும், கணவனுவும் அண்மையில் பிரிந்து விட்டனர். மகன் தங்களது சண்டைகளால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சகோதரி மகாவுடன் மகனை அனுப்பிவிட்டு டுபாய் சென்று விடுகின்றார். போரின் போது தெற்கு லெபனான் மிகவும் பாதிக்கப்பட்டதை அறிந்தே இங்கு வந்துள்ளார்.

இவர்களது தேடும் படலம் தொடர்கின்றது. இறுதியாக ஒரு உடைந்த கட்டிடத்தின் முன்னால், அங்குள்ளவர்களால் சினாவின் சகோதரி மகா குண்டு வீச்சில் இறந்தது உறுதிப்படுத்தப்படுகின்றது. மகன் கரீம் உயிருடன் இருப்பது உறுதியாகின்றது. பிரென்ச் ஊடகவியலாளர்கள் கூட்டிச் சென்றதாக கூறுகின்றனர்.
மகாவின் மரணம் சினாவை மிகவும் பாதிக்கின்றது. போரை நோக்கி சினா எழுப்பும் கேள்விகள் நியாயமானவை. அன்றிரவு அங்குள்ள விடுதியில் தங்குகின்றனர். இரவு மகாவை நினைத்து அழுகின்றார். மகாவின் உடலைக் கூட சினா காணவில்லை. சினாவின் துயரம் வார்த்தைகளாக வெடிக்கின்றது.
“Let them bury her themselves”
“They didn’t ask her opinion nor mine either, even for this war”
“No…it is not my war…..it is not yours”

இவை மிகவும் முக்கியமானவை. இந்தப் போரைப்பற்றி எங்களிடம் அபிப்பிராயம் கேட்கவில்லை. இறந்தவர்களிடமும் கேட்கவில்லை. நாங்கள் போரில் யார்?  இறக்கப்படுபவர்கள். எங்களது எண்ணிக்கையில் தான் உங்களது அரசியல் உள்ளது.

சினாவின் மற்றொரு கேள்வி மிகவும் உக்கிரமானது
‘இது எனது போரல்ல… உனதுமல்ல…’.
இந்த உனது என்பது பலரை நோக்கி வீசப்படுகின்றது. குண்டுகளை வீசும் இராணுவ வீரர்களுக்கும் இது பொருந்தும். போரை காவிச் செல்பவர்கள் இந்த இறந்தவர்கள், இராணுவ வீரர்கள், காயமடைந்தோர், அகதிகள்.
போரை நடாத்துவோர் பெரும் அறைக்குள் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள்.
இறுதியாக கேட்கின்றார் “Do we have the right to live”
‘நாங்கள் உயிர் வாழ்வதற்கு உரிமையுண்டா?’ இது உலகெங்கும் போரால் பாதிக்கப்படும் மக்களின் குரலாக வெளிப்படுகின்றது. அண்மையில் வன்னி மக்களின் அவலக் குரலாக எதிரொலிக்கின்றது.
சினா ஒரு அறைக்குள் அழுது கொண்டிருக்கும் பொழுது மற்ற அறையில் ரொனி விடுதி வரவேற்பாளருடன் உறவு கொண்டிருக்கின்றார். இது தான் மனித இயல்பா? சினாவின் பெரும் அலறும் சத்தத்தைக் கேட்டு ரொனி மற்ற அறைக்கு உறவை இடையில் விட்டு விட்டு ஓடிச் செல்கின்றார்.

மறு நாள் இவர்களது பயணம் தொடர்கின்றது. இப்பொழுது சினா வழமையான அரேபிய பெண்களைப் போல் முழு நீள உடையணிந்து முக்காடிட்டு காணப்படுகின்றார். வண்டிக்கு பெற்றோல் அடிக்க ஒரு பெற்றோல் நிலையத்திற்கு செல்கின்றனர். இது குண்டு வீச்சால் முற்றாக சேதமடைந்துள்ளது. நிலைய முதலாளி, தனது மகன் வெளி நாட்டில் வேலை பார்க்கின்றார். அவர் அனுப்பும் பணம் மூலம் நிலையத்தை புதுப்பிக்கப் போவதாக கூறுகின்றார். சினாவின் பெருமூச்சில் இயக்குனரின் தொனி வெளிப்படுகின்றது. உடைந்த கட்டிடத்தை புதுப்பிக்கலாம், அழிந்த நகரத்தை உருவாக்கலாம், வீடுகளை கட்டலாம். இறந்த உயிர்களை புதுப்பிக்கலாமா? சினாவின் சகோதரி மகா திருப்பிக் கிடைப்பாரா?

புல முகாம்கள் ஏறி இறங்கி ஒருவாறு சினாவின் மகன் கரீம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகின்றனர். மற்றொரு நகரத்தில் உள்ள கிறிஸ்தவ விடுதியில் கரீம் உள்ளார். கரீமுடன் சினா கைத்தொலை பேசி மூலம் கதைக்கின்றார். கரீம் எதுவுமே கூறவில்லை. அந்த நகரத்தை நோக்கிச் செல்லும் போது இருண்டு விடுகின்றது. ரொனியின் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்குகின்றனர். அந்த நண்பர் இஸ்ரேலில் சென்று வேலை செய்ய விரும்புகின்றார். அவருடன் ரொனி சண்டை பிடிக்கின்றார். எதிரியின் வீட்டில் சென்று வேலை செய்வதா?  அங்குள்ள மற்றொரு நண்பர் ‘நாங்கள் கிறிஸ்தவர்கள், எங்களையும் இஸ்ரேலியர் அரேபியராகத்தான் கருதுகின்றார்கள்’ என கவலைப்படுகின்றார்.

சினா இரவே அங்கு சென்று விடவேண்டும் என பிடிவாதம் பிடிக்கின்றார். ரொனியின் நண்பர்கள் அது மிகவும் கடுமையான பாதை. இஸ்ரேலியரின் ரோந்து அதிகம். வாகனத்தைக் கண்டாலேயே சுட்டு விடுவார்கள் எனக் கூறி தடுக்கின்றனர். அரை மனதுடன் சினா உடன் படுகின்றார். அங்கு சினா, ரொனியுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் பொழுது, ரொனி இப்பொழுதே அங்கு செல்வோம் எனக் கூறி செல்கின்றனர்.

கடுமையான பாதை. ஆளரவமற்றுள்ளது. வாகனங்கள் எதுவுமே இல்லை. சிறிது தூரத்தின் பின்னர் ரொனி வாகனத்தின் முன் பக்க விளக்குகளை அனைத்து விட்டு வாகனத்தை ஓட்டுகின்றார். வாகனம் இடையில் நின்று விடுகின்றது. வாகனத்தை அப்படியே விட்டு விட்டு நடந்து பல மைல்களை கடக்கின்றனர். காலையில் கரீம் தங்கியுள்ள விடுதியை சென்றடைகின்றனர்.

கரீமின் தங்கியுள்ள அறைக்குள் சினா செல்கின்றார். அங்கு கரீமின் ஜக்கெட்டை அணிந்து கொண்டு ஒரு சிறுவன் காணப்படுகின்றான். கரீம் எங்கே? சுpனாவின் கேள்விக்கு?……………
‘என்னிடம் ஜக்கெட்டை தந்து விட்டு குண்டுகளுக்குள் இறந்து விட்டான்’.

படத்தின் இயக்குனர் Philippe Aractingi  லெபனானைச் சேர்ந்தவர். கதையை மட்டும் மனதில் கொண்டு போர் முடிந்து பத்து நாட்களுக்குள் தெற்கு லெபனானில் படத்தை எடுத்துள்ளார். போரின் புழுதி படம் முழுவதும் காணப்படுகின்றது. ‘பாதிக்கப்பட்வர்கள் சாட்சிகளாக இருக்க வேண்டும்’ என்பதற்காகவே இதனை போர் முடிந்த சில காலங்களில் படமாக்கினேன் என இயக்குனர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேற்கத்தியர்களுக்கு ‘போர் ஒரு கோப்பை தேநீர், எங்களுக்கு போர் தான் வாழ்க்கை’ இதனை எனது படத்தில் நிறுவியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார். வழமை போல் இல்லாமல் முதலில் காட்சிகள் எடுக்கப்பட்டு பின்னர் திரைக்கதை மெருகூட்டப்பட்டு பின்னர் மிகுதி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தில் வரும் பல காட்சிகள் பாதிக்கப்பட்ட மக்கள் நிஜமாக கூறியவை.

பாதிக்கப்பட்ட மக்களின் துக்கங்களை கமரா காவிச் செல்கின்றது. படத்தில் இறந்த உடல்கள் காட்டப்படவில்லை. அவர்கள் அங்குள்ள உடைந்த கட்டிடங்களின் சிதைவுகளின் கீழ், கால்வாயினுள், சாய்ந்த மரங்களின் கீழ் உள்ளனர். அந்த எதிரொலி படம் முழுவதும் உள்ளது.

வழமையான போர் படங்கள் ஒன்றில் அரசு சார்பாக இருக்கும் இல்லையேல் தீவிரவாதிகள் பக்கமாக இருக்கும். முதன் முதலாக ஒரு படம் மக்கள் சார்பாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய பாத்திரங்கள் இருவரும் போரை எதிர்த்தாலும், தங்களது தேசிய நலனின் மீத அக்கறை கொண்டவர்கள். ரொனி தங்களது முதல் எதிரி இஸ்ரேல் என்பதை தெளிவாக உணர்ந்துள்ளார்.

உடைக்கப்பட்ட துண்டுகளை ஒன்றினைக்க முற்படமால், உடைவுகளாகவே படமாக்கியுள்ளார். சிதைவுகளில் இருந்து சிற்பத்தை செதுக்குவது போல் , காட்சிகளின் சுதந்திரத்தை சிறகடிக்காமல் திரைப்படத்தை தொகுத்தளித்துள்ளார். படத்தின் action image  இக் காட்சிகள் தான்.

கமாஸின்; சிறையில உள்ள் இஸ்ரேல் இராணுவ வீரர் புடையன ளூயடவை ன் தந்தை நோம், காசா மக்களை நோக்கி பத்திரிகையாளர்களுடாக தெரிவித்த செய்தி ‘நீங்கள் நேசிப்பவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பெண்கள், சிறுவர்கள், அப்பாவிகள்…. ஒரு பெற்றோராக பல்லாயிரம் பெற்றோரிடம் கேட்கின்றேன் எனது குடும்பத்தின் துயரத்தை விளங்கிக்கொள்ளுங்கள்.( Some of your loved ones have been killed-women and children, young and innocent…..As a parent speaking to a multitude of parents, I ask you to understand my family’s anguish.)
இதனை இஸ்ரேலிய அரசு விளங்கிக் கொள்ளும் வரை, இந்தத் தாயின் வலியை நாங்கள் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும்.