வசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில்

முன்னாள் கடற்படை தளபதி எட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட இன்று (29) அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

இன்று அவரை ஆணைக்குழுவுக்கு அழைத்துள்ளதாக ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பில் 11 இளைஞர்களை கடந்தியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தம்மை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வசந்த கரன்னாகொட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பில் சாட்சியம் வழங்கவே வசந்த கரன்னாகொட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகவுள்ளார்.