பிரதமரை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி அதிகாரம் வேண்டும்

விரைவாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போது நாட்டில் இருப்பது பலமிக்க அரசாங்கம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமரை கட்டுப்படுத்தக் கூடிய ஜனாதிபதி அதிகாரமே தற்போதைய தேவையாக இருக்கின்றது என்றும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.