வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் – 7 பேர் கைது

வவுனியா, குருமன்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

வாய்தர்கமே இந்த மோதலுக்கான காரணம் என்பதோடு மோதலுடன் தொடர்புடைய சந்தேத்தின் பேரில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காயமடைந்த இரு இளைஞர்களும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யபப்பட்டவர்களிடம் இருந்து வாள்களும், கூரிய ஆயுதங்கள் சிலவற்றையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

20 மற்றும் 30 வயது இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.