ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித உடன்பாடும் இல்லை

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதுவரையில் எவ்வித உடன்பாட்டிற்கும் வரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான ஒற்றுமையை கொடுக்கும் விதமாகவே இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே ஜனாதிபதி வேட்பாளராக தகுதியுடையவர் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.