சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலஸ்ஸன ஜனவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மின்சார கட்டமைப்பை சீர் செய்து தடைப்பட்ட பகுதிகளுக்கு மின் விநியோகத்தை விரைவில் பெற்றுக்கொடுக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.